3 அரைசதங்கள், 20 சிக்ஸர்கள் ; முதல் போட்டியே அசத்தியது!

Published By: Vishnu

27 Nov, 2020 | 10:57 AM
image

நேற்றைய தினம் ஆரம்பமான லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியை அசத்தியுள்ளது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தில் அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கிடையே எல்.பி.எல். தொடரின் முதல் போட்டி நேற்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை குவித்தது.

இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்ல சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தடிய கொழும்பு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 16 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

போட்டியின் ஆட்டநாயகனாக கொழும்பு அணியின் தினேஷ் சந்திமல் தேர்வுசெய்யப்பட்டார்.

இருபதுக்கு : 20 போட்டிகள் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. சிக்ஸர் மழைகளும், விக்கெட் எடுப்புக்ளும் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும்.

அந்த வகையில் நேற்று நடைபெற்று முடிந்த எல்.பி.எல். தொடரின் முதல் போட்டியே ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருந்தது.

மொத்தமாக இப் போட்டியில் இரு அணிகளும் இணைந்து 400 ஓட்டங்களை குவித்ததுடன் போட்டியில் 20 சிக்ஸர்களும் விளாசப்பட்டுள்ளன.

அதேநேரம் போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் (53), குசல் பெரேரா (87), தினேஷ் சந்திமல் (80) ஆகிய வீரர்கள் அரைசதங்களை குவித்துள்ளனர்.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள எல்.பி.எல். தொடரின் இரண்டாவது போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியும், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

CHIEF SCORES:

KANDY TUSKERS 219/3 (20 Overs) RR: 10.95

(M.D.K. J. Perera  87, Rahmanullah Gurbaz 53, B.K.G. Mendis 30, D.A.S. Gunaratne n.o. 33. S. Prasanna n.o. 4, M.S. Gony 1/42, Qais Ahmad 1/28, Dushmantha  Chameera 1/58)

Fall of wickets: 1-75 (Rahmanullah Gurbaz, 5.4 ov), 2-134 (Kusal Mendis, 12.4 ov), 3-207 (Kusal Perera, 19.1 ov)

Did not bat: I.K. Pathan, N. Pradeep, Naveen-ul-Haq, P.H.K.D. Mendis, L. Embuldeniya,K.Anjula

COLOMBO KINGS 219/7 (20 Overs) RR: 10.95

(L.D. Chandimal 80, L.J. Evans 22, S.T. de Silva 22, I. Udana n.o. 34,

Qais Ahmad 15, M.S. Gony n.o. 0, N. Pradeep 2/34 (4), Naveen-u-Haq 2/40, S. Prasanna 1/6, D.A.S. Gunaratne 1/49)  

Fall of wickets: 1-64 (Laurie Evans, 5.2 ov), 2-131 (Dinesh Chandimal, 12.3 ov), 3-131 (Thikshila de Silva, 12.4 ov), 4-134 (Angelo Mathews, 13.4 ov), 5-167 (Ashan Priyanjan, 16.2 ov), 6-167 (Andre Russell, 16.5 ov), 7-215 (Qais Ahmad, 19.4 ov)

Did not bat: P.V.D. Chameera, M.A. Aponso.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49