யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள செயற்பாடுகள் ஆரம்பம்

Published By: Digital Desk 4

27 Nov, 2020 | 11:57 AM
image

யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள செயற்பாடுகள் இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் க. நடராஜா அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கான சேவை இடம்பெறமாட்டாது என  அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பதிவாளர் திணைக்கள அலுவலக ஊழியர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று முழுநாளும் செயற்பட்டதன் காரணமாக இன்றிலிருந்து பொது மக்களுக்கான சேவை வழமை போல் இடம்பெறும் என தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகமானது கடும் மழையின் தாக்கத்தினால் நான்கு மாடிகளைக்கொண்ட குறித்த கட்டிடத்திற்குள் மழை நீர் உட்புகுந்து அலுவலகம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது.

வெள்ளம்  உட்புகுந்த குறித்த அலுவலகத்தினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு குறித்து அலுவலகத்தினை பார்வையிட்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17