எமது பகுதி மக்களை இனியாவது வாழ விடுங்கள் - சபையில் சார்ள்ஸ் எம்.பி ஆவேசம்

27 Nov, 2020 | 12:39 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையும் இராணுவ ஆக்கிரமிப்பும் ஒன்றென்றே எமது தமிழ் மக்கள் கருதுகின்றனர். மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. 

எமது  பிரதேசங்களில் யுத்தம் இடம்பெற்றது என்பதற்கு இதுவே சரியான சான்றாக உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார். 

சமல் ராஜபக் ஷ அவர்கள் வடக்கில் ஒரு கூட்டத்தை நடத்தி, இதற்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் உள்ளிட்ட  ஆளும் தரப்பு மற்றும் எமது உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறுதெரிவித்த அவர் மேலும் பேசுகையில்.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏனென்றால் யுத்த காலத்தில் இராணுவ நடவடிக்கைகளுக்காக மக்கள் எவ்வளவு பயந்தார்களோ அதேபோன்று மகாவலி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளின் போதும் அதை ஒத்த செயலாகவே கருதுகின்றனர். மகாவலி அபிவிருத்தி அதிகார சபை எமது நிலங்களை அதிகளவில் அபகரித்தது. 2010 ஆம் ஆண்டின் பின்னர் சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டது.

1988,2007  ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல்கள்  ஊடாக வடக்கு பிரதேசத்திலுள்ள பல பகுதிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அபகரித்தது.  யுத்தம் முடிந்த பின்னர் 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியா மாவட்டத்தில் 5000 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு 2200 சிங்களக்குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. நாமல்கம,பொகஸ்கெவவ 1 ,பொகஸ்கெவவ 2,களினிகம,நந்திமித்தினி கம என்ற 5 சிங்கள கிராமங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.  இது முற்று முழுதாகவே மகாவலி அபிவிருத்தி அதிகார சபையாலேயே செய்யப்பட்டது.

அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் 2000 ஏக்கர் காடுகள் அழி க்கப்பட்டு சப்புமல்தன ,கஜபாபுர ,கலம்பெபவ ,என்ற கிராமங்கள் உருவாக்கப்பட்டு 1500 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. 

இதன் பின்னே அங்கிருந்த மண்கிண்டிமலை பன்சல்கந்த எனப்பெயர் மாற்றப்பட்டு 850 ஏக்கர் காணிக்கை துப்புரவு செய்யப்பட்டு தென்பகுதியிலுள்ளவர்களுக்கு 25 ஏக்கர் வீதம் வழங்கப்பட்டு தென்னைப் பயிர்செய்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது அரசாங்கதின் முழுமையான ஆதரவுடன் 25 ஏக்கர் வழங்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்த தமிழ் மக்கள் மீண்டும் தமது இடங்களுக்கு வரமுடியாதவாறு  விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

மகாவலி அதிகார சபை உருவாக்கப்பட்ட பின்னர் பல தமிழ் கிராமங்கள் சிங்கள கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சபை தனியே சிங்கள மக்களுக்கு உரித்தான சபையாக செயப்பட்டு வருகின்றது. 2010-2015 ஆண்டு காலத்தில் எத்தனை புத்திய சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும். 

அணைத்து சிங்கள கிராமங்களும் உங்களின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. எங்களின் பிரதேசங்களில் யுத்தம் இடம்பெற்றது என்பதற்கு இதுவே சரியான சான்றாக உள்ளது. எங்களை பொறுத்த வரையில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையில் செயற்பாடுகள் இராணுவ செயற்பாடுகள் என்றே கருதுகிறோம். 

1988 ஆம் ஆண்டில் இருந்தே உங்களின் ஆக்கிரமிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. எமது பிரதேசத்தில் எமது மக்களை வாழ விடுங்கள். இலங்கையை கைப்பற்ற நாம் ஆயுத போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. வடக்கு கிழக்கில் எமது மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே போராடினோம்.

விடுதலைப்புலிகள் எமது பகுதிகளில் காடுகளை வளர்த்தனர், வளங்களை பாதுகாத்தனர். இன்றும் இலங்கையில் அதிகளவில் காண்டுகளை கொண்ட மாவட்டம் எமது மாவட்டமே. 

1984 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த எமது மக்களின் காணிகளும் இந்த மகாவலி வலயத்தில் உள்ளது. அவர்களின் நிலங்களில் எமது மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலைமை உள்ளது. எனவே மகாவலி எல் வலயம் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில்  சமல் ராஜபக் ஷ அவர்கள் வடக்கில் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும். 

இதற்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் உள்ளிட்ட  ஆளும் தரப்பு மற்றும் எமது உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை 1970 ஆம் ஆண்டே உருவாக்கப்பட்டது. அதன் பின்னரே ஆயுத போராட்டம் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது. அதன் பின்னரே  எமது இனத்தை, எமது மண்ணை பாதுகாப்பதற்காகவே பிரபாகரன் போராட்டத்தை  ஆரம்பித்தார். 

அவர்  இன்றில்லாத நிலையில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எமது தலைவர் இல்லாத காலப்பகுதியில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்கள் இந்த அதிகாரசபையினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை எமது தலைவர் பிரபாகரனுக்கு இன்று பிறந்தநாள் என்பதனால் அவருக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38