பாடசாலைகளில் கொரோனா கொத்தணி உருவாகாது - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி

26 Nov, 2020 | 11:08 PM
image

(எம்.மனோசித்ரா)

பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் திருப்திகரமானவையாக உள்ளன. எனவே பாடசாலைகளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுசி பெரேரா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து இணையவழியூடாக இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கான மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகக் காணப்படுகிறது. மே மாதத்திற்கு முன்னரே கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பன ஒன்றிணைந்து பல சுகாதார விதிமுறைகளை வெளியிட்டுள்ளோம்.

இலங்கையில் அண்மையில் இல்லாமல் 1918 ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து செயற்படுகிறது. அப்போதிலிருந்து கல்விக்கான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. சுகாதாரத்துறைக்கு கல்வி இன்றி இயங்க முடியாது. அதே போன்று கல்விக்கும் சுகாதாரம் இன்றியமையாததாகும்.

எனவே பாடசாலைக்குள் கொத்தணி உருவாகுவதை பார்ப்பதற்கான தேவை எமக்கு கிடையாது. அவ்வாறு உருவாகக் கூடிய வாய்ப்புக்களும் மிகக் குறைவாகும். காரணம் பாடசாலைகளில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள தயார்ப்படுத்தல்கள் திருப்தியடையக் கூடியதாக உள்ளன. சுகாதார மேம்பாட்டு குழுவினால் கண்காணிப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வாறிருப்பினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பெற்றோர் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுகயீனம் அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிள்ளைகள் இருப்பார்களாயின் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இதுவே பிரதானமான பொறுப்பாகும்.

கல்வி நடவடிக்கைகளில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது நாட்டில் அனைவரதும் எதிர்பார்ப்பாகும். எனவே பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தை நாட்டில் தற்போதுள்ள நிலையில் எடுக்கப்பட்ட நேர்மறையான தீர்மானமாகக் கருத வேண்டும். இதனை வெற்றிகரமாக கொண்டு செல்ல அனைவரும் புதியதொரு வழமையான சூழலுக்கு பழக்கமடைய வேண்டும்.

அவ்வாறில்லை என்றால் அடுத்த வருடம் மாத்திரமின்றி இன்னுமொரு வருடமும் இவ்வாறே பயணிக்க வேண்டியிருக்கும். பாடசாலைகளை திறப்பதற்கும் மூடுவதற்கும் வாய்ப்புக்கள் ஏற்படும். எனவே அனைத்திற்கும் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09