எவ்வித திட்டமிடலும் இல்லாது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன - சஜித்

Published By: Gayathri

26 Nov, 2020 | 09:25 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் எந்தவித திட்டமிடலும் இல்லை எனவும், அதனால்தான் மாணவர்களின் வருகையும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றில்,  பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் தற்போது எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகளை கடந்த 23ஆம் திகதி திறப்பதற்கு கல்வி அமைச்சர் என்ற வகையில் நீங்கள் தீர்மானித்தீர்கள். 

இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 20ஆம் திகதி மாவட்ட சுகாதார பிரிவு, பொது சுகாதாரத்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரசபைக்கு, 23ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்போது, தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்து கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், பாடசாலைகளை திறப்பதற்கு எடுத்த காலயெல்லைக்குள் பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை பூர்த்திசெய்ய காலம் போதுமானதாக இல்லை. 

நாட்டில் இருக்கும் சுமார் 10ஆயிரம் பாடசாலைகளில் சுமார் 5ஆயிரம் பாடசாலைகளை திறக்க தீர்மானித்திருக்கின்றது. அதில்  தரம் 6 தொடக்கம் 13 வரை சுமார் 33இலட்சம் மாணவர்கள் இருக்கின்றனர்.

சிரேஷ்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் ஆலோசனைக்கமைய பாடசாலைகளை திறக்க தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் என்றவகையில் நீங்கள் தெரிவித்தீர்கள். 

ஆனால் இன்று கிளிநொச்சியில் பாடசாலை கட்டமைப்பு முழுமையாக மூடப்பட்டுள்ளது. கண்டி கல்வி வலயத்தில் 45பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. குருநாகலையிலும் சில பாடசாலைகள் ஆளுநரின் கோரிக்கைக்கமைய மூடப்பட்டிருக்கின்றன.

அத்துடன் பாடசாலைகளில் தொற்று நீக்கம் செய்வதற்கும் ஏனைய சுகாதார தேவைகளுக்கும் என 100 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளுக்கு 8 ஆயிரம் ரூபாவும், 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளுக்கு 10 ஆயிரம் ரூபாவும், 200க்கும் அதிக மாணவர்கள் இருக்கும் பாடசாலைகளுக்கு 12ஆயிரம் ரூபாவும் வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தீர்கள். 

ஆனால், ஒருசதமேனும் குறித்த கல்வி காரியாலயங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. 

அதேபோன்று பாடசாலை சேவைகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மாணவர்களை இடைவெளியை பேணி ஏற்றிவரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

வேன் ஒன்றில் 20 மாணவர்களை ஏற்றுவதாக இருந்தால், இடைவெளி விட்டு அனுமதிக்கும்போது 10 மாணவர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும். 

இதனால் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு நிவாரணம் வழங்கவேண்டும், இல்லாவிட்டால் சேவையில் ஈடுபட முடியாது என வேன் சாரதிகள் தெரிவிக்கின்றனர். 

முறையான திட்டமிடலுடனே இதனை மேற்கொள்ளவேண்டும் என்றே தெரிவிக்கின்றோம். ஏனெனில், டிசம்பர் 23ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட இருக்கின்றது.

ஜனவரியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெற இருக்கின்றது.

மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் பாடசாலை கட்டமைப்பு மூடப்பட்டிருக்கின்றது.

அதனால் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு முறையான திட்டமிடலுன் இதனை மேற்கொள்ளுங்கள். 

கல்வி அமைச்சின் செயலாளர் சொன்னதற்காக அவசரப்பட்டு மேற்கொள்ளவேண்டாம். 

முறையான வேலைத்திடம் ஒன்றை அமைத்துக்கொண்டு பாடசாலைகளை திறந்திருக்கலாம். 

தற்போது பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளபோதும் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53