போகவந்தலாவை - குயினா தோட்டப் பகுதியில் சிறுமியொருவர் கர்ப்பம் தரித்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

14 வயது சிறுமியொருவரே இவ்வாறு கர்ப்பம் தரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சிறுமியை விசாரணைகளுக்காக பொலிஸார் அழைத்து வந்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் சிறுமியின் பெரியம்மாவின் மகன் ஒருவரினால் குறித்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக சிறுமி வாக்குமூலமளித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் பொகவந்தலாவை பெற்றோசோ தோட்டத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரை பொலஸார் தேடிவருவதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..