24 மணிநேரமும் அரச ஒசுல மருந்தகங்கள் திறப்பு

Published By: Digital Desk 4

26 Nov, 2020 | 04:25 PM
image

(க.பிரசன்னா)

தொற்றா நோய்களின் சிகிச்சைக்கான மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதற்கு அரச ஒசுல மருந்தகங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்குமென அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாம் இந்த சூழ்நிலையில் பொது மக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு இணையத்தளம், தொலைபேசி மூலமாக இலக்கங்களை வெளியிட்டு வருகின்றோம்.

இந்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மருந்து பட்டியலை வட்ஸ்அப், வைபர் மூலமாக அனுப்பி வைத்தால் நாம் தேவையான மருந்துகளை ஒசுசல மருந்தகத்தில் தயார் செய்து உங்களுக்கு கிடைக்கக்கூடியதாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

தற்பொழுது அரச வைத்தியசாலைகளில் தொற்றா நோய்க்கிளினிக் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்க்கொள்வோருக்கு வசதியாக அரச ஒசுசல மருந்தகங்கள் 24 மணித்தியாலமும்; செயற்படுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விசேடமாக கம்பஹா, கொழும்பு போன்ற பிரதேசங்களில் தற்போது சேவைகளை முன்னெடுத்துள்ளோம். இருப்பினும், இதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. எமது மருந்தக கூட்டுத்தாபன இணையத்தளத்தில் தொலைபேசி இலக்கங்கள் உண்டு.

நீங்கள் தொற்றாநோய்க்கு உள்ளானவர்கள் என்றால் அதற்கான மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டாம். 

கொரோனா தொற்றினால் உங்களுக்கு ஆபத்து ஏற்படுவதையும் பார்க்க தொற்றா நோய்க்கு மருந்துகளை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சின் சார்பாக இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் இணையத்தளமான   www.spc.lk    பார்வையிட முடியுமென்பதுடன் 0112320356-9 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் 0112447118 என்ற தொலைநகலுடனும் இணைந்து மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08