ஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் அதிகாரம் எமக்குள்ளது - தினேஷ்

Published By: J.G.Stephan

26 Nov, 2020 | 11:59 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)


2015 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் ஜெனிவாவில் இணை அனுசரணை வழங்கிய பிரேரணையானது இலங்கையின் அரசியல் அமைப்பிற்கும், மக்கள் ஆணைக்கும் முரணானது.

எனவே தான் ஜெனிவா பிரேரணையில் இருந்து விலகிக்கொள்வதாக தீர்மானம் எடுத்ததாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் அறிவித்தார். எமது  நாட்டினை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட பிரேரணையை நிராகரிப்பதற்கு எமக்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் கூறினார்.


அவர் மேலும் கூறுகையில்,

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஒரு பிரேரணையை ஆதரித்து வாக்களித்த முதல் சந்தர்ப்பம் கடந்த ஆட்சியில் இடம்பெற்றது. அதேபோல் எமது நாட்டிற்கு அமைதியை பெற்றுக்கொடுத்த இராணுவம் உள்ளிட்ட சகலரையும் காட்டிக்கொடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேபோல் எமது அரசியல் அமைப்பை மீறுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. ஜனாதிபதிக்கும், பாராளுமன்றத்திற்கும் தெரியாது 2015 ஆம் ஆண்டு பிரேரணையின் முதல் பிரதியில் கைச்சாத்திட்டனர். 

யுத்தம் முடிந்த பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு வந்த நேரம் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருடன் உடன்படிக்கை எதிலும் கைச்சாத்திடவில்லை. வெறுமனே ஊடக சந்திப்பொன்று இடம்பெற்று அறிவிப்பொன்றே விடுக்கப்பட்டது.

ஆகவே பொய்களை கூறி நாட்டுக்கு எதிராக செயற்பட வேண்டாம். நாம் சர்வதேசத்துடன்  கணக்குவழக்குகளை செய்யும் வேளையில் நாட்டிலுள்ள சகல கட்சிகளும் ஒரே கொள்கையில் இருந்து செயற்பட வேண்டும். ஏனைய நாடுகள் அவ்வாறே செயற்பட்டு வருகின்றனர். அதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சி மாற்றத்துடன் எமது அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை என்ன என்பதை அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் தெளிவாக கூறியுள்ளோம்.

அதற்கான மக்கள் ஆணையுடன் நாம் செயற்பட்டும் வருகின்றோம். அத்துடன் ஒற்றை ஆட்சிக்குள்  ஜனநாயகம், மனித உரிமைகள், தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி என்பவற்றை கட்டியெழுப்புவோம் எனவும் தெரிவித்துள்ளோம். அதேபோல் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஜெனிவாவில் உரையாற்றும் வேளையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை இணை அனுசரணை வழங்கிய பிரேரணையில் இருந்து நீங்குவதாக அறிவித்தேன்.

இலங்கையின் மக்கள் ஆணைக்கும், அரசியல் அமைப்பிற்கும் முரணானது. எனவே எமது அரசாங்கமும், அமைச்சரவையும் இணைந்து தீர்மானம் எடுத்து, ஆதாவது 2015 ஆம் ஆண்டு முன்னைய ஆட்சியில் இணை அனுசரணை வழங்கப்பட்ட பிரேரணை ஜனாதிபதிக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ தெரியாது. ஆனால் நாம் செய்யப்போவதை பாராளுமன்றத்தில் அறிவித்து சகலருக்கும் வெளிப்படையாக எமது நிலைப்பாட்டை அறிவித்தோம்.

கடந்த ஆட்சியில் இவர்கள் மேற்கொண்ட தேசத்துரோக செயற்பாட்டில் இருந்து நாட்டை விடுவிக்க ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தினால் முடிந்தது. ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஒரு நியாயமற்ற பிரேரணையாகும். இது இலங்கையை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட பிரேரணை என்பதால் அதனை நாம் நேரடியாக எதிர்க்கிறோம்.

எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக விளங்கிக்கொண்டுள்ளது. அதேபோல் 2030 ஆம் ஆண்டுக்கான நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் எமது செயற்பாடுகள் என்ன என்பதையும், தேசிய ரீதியில் எமது பொறிமுறை எவ்வாறானது என்பதையும் அதன் மூலமான நிலையான அமைதி, அபிவிருத்தி என்பவற்றை நாம் தெளிவாக கூறியுள்ளோம்.

எனவே நாம் அரசியல் அமைப்பிற்கு அமைய சரியான தீர்மானம் எடுத்துள்ளோம். எமது மக்கள், எமது நாட்டை கருத்தில் கொண்டே நாம் இந்த தீர்மானங்களை முன்னெடுத்துள்ளோம். எமது ஆட்சியில் வடக்கு தொடக்கம் தெற்கு வரை சகலருக்கும் ஒரே விதமாக கொவிட் நிலைமைகளில் உதவி செய்துள்ளோம்.

யாரையும் நாம் நிராகரிக்கவில்லை. பிராந்தியமாக நாம் பிளவுபட ஒருபோதும் நினைக்கவில்லை. இலங்கையின் உண்மை நிலைமையை கூறிய நெஸ்பி பிறப்பு எழுதிய புத்தத்தை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் படித்துப்பார்க்க வேண்டும். உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது. எனவே உடனடியாக விமானத்தில் இந்த புத்தகத்தின் பிரதிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் எமது ஆட்சியில் பிரதான நாடுகளின் பிரதானிகள் வருகை தந்துள்ளனர். அனைத்து நாடுகளும் எம்முடன் இணைந்து பயணிக்கும் வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர். இந்த நாடுகளில் எமது தூதரங்கள் செயற்பட்டுக்கொண்டுள்ளது. நாம் அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றோம். அதேபோல் கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமையில் எமக்கு உலகில் பல நாடுகள் உதவினர். நெருக்கடியான நிலைமையில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல நாடுகளுக்கும் நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 அதேபோல் கொவிட் நிலைமையில் பொருளாதார ரீதியில் நெருக்கடியில் உள்ள நாடுகளின் கடன்களை நிராகரிக்க சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதற்கான வரவேற்பும் ஒத்துழைப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கொவிட் -19 வைரஸ் பரவலுக்கான தடுப்பூசியை எமக்கும் வழங்குவது குறித்து அக்கறை எடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19