புதிய அரசியல் அமைப்பில் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்துங்கள் - தமிழர்கள் ஐக்கியப்படுவார்கள் என்கிறார் கிரியெல்ல

Published By: Digital Desk 3

26 Nov, 2020 | 10:38 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், அதிகார பகிர்வு, சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் அரசியல் அமைப்பொன்றை உருவாக்கினால் தமிழர்கள் பழையவற்றை மறந்து ஐக்கியப்படுவார்கள் என தமிழ் அரசியல் தலைமைகள் கூறியுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார். ஜனாதிபதி உருவாக்கும் அரசியல் அமைப்பின் அதிகாரபகிர்வை உறுதிப்படுத்துமாறும் அவர் தெரிவித்தார்.

ஊடகம், வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

 2010 ஆம் ஆண்டு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த சபையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த காலத்தில் நாட்டின் யதார்த்தமான நிலைமையை எடுத்துரைக்கும் விதத்தில் பேசினேன். ரொபட் முகாபே சென்ற பாதையில் செல்லாது மண்டேலா சென்ற பாதையில் செல்லுமாறு அவருக்கு கூறினேன். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் சரியான பாதையில் செல்லவில்லை, அவரது ஆட்சியில் 18 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது, அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டார், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர், சிலர் நாட்டை விட்டு ஓடினர், தொழிற்சங்கவாதிகள் கொல்லப்பட்டனர், நீதியரசர் விரட்டியடிக்கப்பட்டார். சிறுபான்மை மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது, இதெல்லாம் சேர்ந்தே சர்வதேசம் எமக்கெதிராக திரும்ப காரணமாக அமைந்தது.

அதேபோல் அதிகார பகிர்வு விடயத்தில் சிறுபான்மை மக்கள்கின் உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படும் அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டால் தமிழர்கள் ஏனைய அனைத்தையும் மறந்து ஐக்கியமாக வாழ தயாராக உள்ளதாக இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்களும் சர்வதேச நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களும் என்னிடம் கூறினர். இப்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவது குறித்து பேசுகின்றார். சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட்டால் எமது நாட்டிற்கு நன்மையாக அமையும்.

பண்டாரநாயக அம்மையார் அரசியல் அமைப்பொன்றை உருவாக்கினார் அப்போது சிறுபான்மை கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஜே.ஆர் ஜெயவர்தனவின் அரசியல் அமைப்பிற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்க எடுத்த முயற்சியில் சிறுபான்மை பிரதிநிதிகள் சகலரும் கலந்துகொண்டனர். எனவே சகல இன மக்களும் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இந்த நாட்டிற்கு பொருத்தமான  அரசியல் அமைப்பொன்றை உருவாக்க முடியும். அதிகார பகிர்வு என்பதை மிகப்பெரிய அச்சுறுத்தலான விடயமாக நினைத்துக்கொண்டுள்ளனர். எமது வரலாற்றில் அதிகார பகிர்வு என்பது இருந்துள்ளது. அதிகார பகிர்வே அவசியம் அதுவே ஐக்கியத்தை உருவாக்கும். இலங்கையில் முதலில் அதிகார பகிர்வை கேட்டதே சிங்கள தலைவர்கள் தான். அப்போதே அதிகார பகிர்வு ஏற்பட்டிருந்தால் இன்று எமக்கு இவ்வாறான மோசமான நிலைமை உருவாக்கியிருக்காது. எனவே புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது என்றால் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்குங்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22