அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள ஐந்து வருட அபிவிருத்தி திட்ட வரைவுகளின் பின்னர் பொருளாதாரம் பிரகாசமடையும்

Published By: Ponmalar

28 Jul, 2016 | 04:20 PM
image

(பா.ருத்ரகுமார்)

தற்போது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியானது சூரிய ஒளி மந்த நிலையில் ஒளிர்வது போலிருந்தாலும் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள ஐந்து வருட அபிவிருத்தி திட்ட வரைவுகளின் பின்னர் அந்த சூரிய வெளிச்சத்தை பிரகாசமாக்கிக்கொள்ள முடியும் என மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

புதிதாக நியமனம் பெற்றுள்ள மத்திய வங்கி ஆளுனரை கௌரவிக்கும் முகமாகவும் இலங்கையின் பங்குச்சந்தை பரிவர்த்தனையின் புதிய பரினாமங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் உலக வர்த்தக மையத்தில் இன்று (28) இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி கருத்து தெரிவிக்கையில்,

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் மூலதன சந்தை முக்கியமான பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் இலங்கையின் பங்குச்சந்தை பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பாகமாக இருப்பதோடு அதற்கு மத்திய வங்கியும் பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. தற்போது இலங்கையின் பொருளாதார அபிவிருத்திகான அடித்தளம் மிகவும் வழுவாக இடப்பட்டுள்ளது. அதனை நிலையான வகையில் கொண்டு செல்வது தொடர்பில் நாம் ஆலோசிக்க வேண்டும்.

பொரளாதார வளர்ச்சி மற்றும் பங்கு சந்தை அபிவிருத்தி போன்றன தொடர்பில் நாம் போலியான அல்லது திடீரென ஒரு கொள்கையை பின்பற்றி செல்வதை விட நிதானமாகவும் சரியான பாதையில் பயனிக்ககூடியதுமான வழியில் செல்ல வேண்டும்.  அவ்வாறில்லாத போது அத பொருளாதார வளர்ச்சியில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தும்.

 சூரிய ஒளியை பிரகாசிக்க செய்ய அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்து செயற்படுத்த வேண்டும். அதனடிப்படையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த ஐந்து வருட அபிவிருத்தி திட்டத்தை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைப்பார். இதன்மூலம் நிலையான பொருளாதார பாதைகளை அடையாளம் காணமுடியும். அத்தோடு இதன்மூலம் பொருளாதார கொள்கைகள் தொடர்பில் உறுதியான பல தீர்மானங்களை எடுக்க முடியும். இதற்காக நாம் அனைவரும் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11