வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அறிவித்தல்!

Published By: Jayanthy

26 Nov, 2020 | 01:20 AM
image

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான OCI அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான OCI  அட்டைகளை 2021 ஜூன் 30 ஆம் திகதி வரை புதிபிக்கமுடியும் என உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டைகளை புதுப்பிப்பதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 2021 ஜூன் 30 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும். தற்போது அமுலில் இருக்கும் விதிகளுக்கு அமைவாக OCI அட்டைகளை வைத்திருப்பவர்களில் முகத்தில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்கள் காரணமாக, 20 வயதுக்கு குறைவானவர்கள்   தமது கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்கும்போதும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு தடவையும் தமது OCI அட்டைகளையும் புதுப்பிக்க வேண்டிய தேவை உள்ளது. 

இருந்தபோதிலும் OCI அட்டை வைத்திருப்பவர்கள் ஏற்கனவே உள்ள OCI விதிகளுடன் இணங்கிச் செல்லுமாறும் விதிமுறைகளுக்கு ஏற்ப OCI அட்டைகளைப் புதுப்பிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17