மரணிப்பவர்களை தகனம் செய்ய 58 ஆயிரம் ரூபா வழங்க வேண்டுமா ? முஜிபுர் சபையில் கேள்வி

25 Nov, 2020 | 09:52 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கொரோனாவால் மரணிப்பவர்களின் இறுதிக்கிரியைக்கு பெட்டியை பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கின்றோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில், கொவிட் மரணங்களில் அதிகமானவை கொழும்பிலேயே இடம்பெற்றிருக்கின்றன. 

இவ்வாறு மரணிப்பவர்களை தகனம் செய்வதற்காக கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் 58ஆயிரம் ரூபா அறவிடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்தி வெளியிடப்படுகின்றது. இதன் உண்மை நிலை என்ன என கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுகாதார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் காரணமாக ஒருவர் மரணித்தால் அதனை தகனம் செய்வதற்கான செலவினங்களை மரணித்தவரின் குடும்பமே மேற்கொள்கின்றது.

குறிப்பாக சடத்தை எந்தவகையான பெட்டியை பெற்றுக்கொள்வது, எங்கிருந்து பெற்றுக்கொள்வது போன்ற விடயங்களை அந்த குடும்பமே மேற்கொள்கின்றது.

இறுதிக்கிரியை மேற்கொள்ள பெட்டியை பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க நன்கொடையாளர்களுடன் கதைத்து தேவையான வசதிகளை செய்துகொடுக்கின்றோம். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27