பயங்கரவாதிகளின் தினங்களை கொண்டாடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் - பொலிஸ்

25 Nov, 2020 | 09:48 PM
image

(செ.தேன்மொழி)

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு எதிர்வரும் 29 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

உள்நாட்டு யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலை புலிகள் இயத்தின் போராளிகள் நினைவுதினத்தை அனுஷ்டிக்கும் நோக்கத்தில் அதற்கான அனுமதியை வழங்குமாறு அப் பகுதியில் சிலர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுக்கு எதிராக பொலிஸார் தடைஉத்தரவு விதித்த போது, அந்த உத்தரவை நீக்குமாறு குறிப்பிட்டு யாழ் மேல் நீதிமன்றத்தில் சிலர் மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ததுடன், அந்த மனுக்களை பரிசீலனை செய்யாமலே நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் திகதி ஏற்கனவே மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்கு தடைவிதித்திருந்த்துடன்,எதிர் வரும் 29 ஆம் திகதி வரையிலும் இந்த நினைவு தினத்தை கொண்டாடக் கூடாது என்று அந்த தடை உத்தரவை நீடித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன்  1999 ஆம் ஆண்டிலேயே இந்த இரு தினங்களையும் மாவீரர் தினமாக பெயரிட்டிருந்தார்.

அந்த தினத்தையே இவர்கள் இவ்வாறு கொண்டாட முயற்சித்து வருகின்றனர். பயங்கரவாதிகளின் தினங்களை கொண்டாடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்செயற்பாடாகும்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் போது ,  சட்டமா அதிபரின் சார்பில் சிரேஷ்ட சொலிஸ்டர் ஜெனரால் அரிப்பிரியா ஜயசுந்தரம்,பிரதி சொலிஸ்டர் ஜெனரால் குமார்ரத்னம், சிரேஷ்ட சட்டதரணி ஜனக்கபண்டார மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும்,சட்டநரணியுமான ருவன் குணசேகர ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர். 

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக எவரேனும் செயற்பட்டால் அவர்களை கைது செய்து,அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கையும் எடுக்கமுடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21