யாழில் அதிகரிக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள்

Published By: Digital Desk 4

25 Nov, 2020 | 04:24 PM
image

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார். 

சமூகத்தில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்!  – கீர்த்தனா ஜெயரட்ணம் (யாழ். சமூக செயற்பாட்டு மையம்) – Makkalkural.lk

பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்று   யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனை  தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2019 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இருந்து 1076 பெண்களுக்கு எதிரான வன்முறை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் 2020 ஆம் ஆண்டு இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை 1011 பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் யாழ் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலை காணப்படுகின்றது. வீட்டு வன்முறை, திருமணத்துக்கு முன் ,திருமணத்துக்கு பின்னரான வன்முறைச் சம்பவங்களே முறைப்பாடுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும் இவ்வாறான முறைப்பாடுகள் உரிய சட்ட நடைமுறைகளின் பிரகாரம் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் விசாரணை செய்யப்பட்டு அப் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள் வழங்கப்படுகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56