தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் வெளியீடு

Published By: Digital Desk 4

25 Nov, 2020 | 06:18 PM
image

(க.பிரசன்னா)

60 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டத்துக்கு அமைவாக மேன்முறையீடுகளின் பின்னர் தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளின் பெயர்பட்டியல் அரசநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்வைக்கப்பட்ட முறையீட்டின் அடிப்படையில் வேலையின்மையை உறுதிப்படுத்துவது தொடர்பில் மேன்முறையீட்டுக் குழு திருப்தியடைந்த பட்டதாரிப் பயிலுனர்கள் மற்றும் டிப்ளோமாதாரிகளின் பெயர்பட்டியலே தற்போது வெளியிடப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்பட்டவர்களை பயிற்சிக்காக பிரதேச செயலகங்களுக்கு தாமதமின்றி இணைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆவணங்கள் நேர்முகத்தேர்வில் பரீட்சிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சத்தியக்கடதாசி பொருத்தமான முறையின் கீழ் வழங்கப்படாமை, முதன்மைத் தகைமைகளில் சிக்கல் நிலைமை, வேலையற்றதன்மை உறுதிப்படுத்தப்படாமை, 2020.08.21 திகதி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கடிதத்தினூடாக கேட்கப்பட்டிருந்த ஆவணங்களுடன் பொருத்தமான படிவத்தின் மூலம் மேன்முறையீடு செய்யாமை மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்துக்கும் சேவையில் இராஜினாமா கடிதம் சமர்ப்பித்துள்ள நிறுவனத்துக்குமிடையில் வேறுபாடுகள் காணப்படல் உள்ளிட்ட காரணங்களினால் மேன்முறையீடு பரிசீலிப்பது சிரமமாக இருந்ததினால் குறிப்பிட்ட விண்ணப்பதாரிகளின் மேன்முறையீடுகள் மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இவை தொடர்பான மேலதிக தகவல்களை adcs.rec.pubad@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

மேலும் 2019.12.31 ஆம் திகதிக்கு பட்டத்தகைமையை பூர்த்தி செய்து ஆனாலும் பட்டச்சான்றிதழ் அத்திகதிக்கு முன்னர் கிடைக்காததால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் விசாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளில் தகைமையடைந்துள்ள விண்ணப்பதாரிகளின் பெயர்பட்டியல் மற்றும் 2019.12.31 திகதிக்கு பட்டத்தகைமையை பூர்த்திசெய்து ஆனாலும் பட்டச்சான்றிதழ் அத்திகதிக்கு முன்னால் கிடைக்காததால் இச்செயற்றிட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனதால் மேன்முறையீடு செய்துள்ள விண்ணப்பதாரிகளில் தகைமையடைந்துள்ள விண்ணப்பதாரிகளின் பெயர்பட்டியல் ஆகியவை இணையத்தளத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவற்றை காலதாதமின்றி வெளியிடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22