பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் போராட்டத்திற்கு வெற்றி

Published By: R. Kalaichelvan

25 Nov, 2020 | 02:08 PM
image

(நா.தனுஜா)

பெண்கள் பயன்படுத்தும் சுகாதாரத் தயாரிப்புக்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக நேற்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலுவாகக் குரல் எழுப்பிய நிலையில், சானிட்டரி நாப்கின்களுக்கு எவ்வித வரி அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு 15 சதவீத வரி முன்மொழியப்பட்டுள்ளமைக்கு எதிராக நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுந்தொனியில் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினர் டயானா கமகே மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் கீதா குமாரசிங்க ஆகியோர் இதுவிடயத்தில் வலுவான கருத்துக்களை முன்வைத்தனர்.

'இந்த நாட்டில் நூற்றுக்கு 52 சதவீதமானோர் பெண்களாவர். அவ்வாறிருக்கையில் வரவு - செலவுத்திட்டத்தில் சானிட்டரி நாப்கின்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது பெண்களின் சுகாதாரப்பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால், சானிட்டரி நாப்கின்களை அத்தியாவசியப்பொருளாக அறிவிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்' என்று சபையில் டயானா கமகே தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02