மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் செயற்பாட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான ஒப்பந்த காலத்தை ஐந்து வருடங்களுக்கு  நீடிக்க வேண்டிய தேவை உள்ளதாக   ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எதிரணியினர் பாதயாத்திரையை ஒழுங்கு செய்தமை எமக்கு தெரியும். ஆனால் இவ்விடயம் தொடர்பில் கட்டாயம் எம்முடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுத்திருக்க வேண்டும். 

தேர்தலில் தோல்வியடைந்ததிலிருந்து குறை கூறி வருகின்றனர். ஆட்சி அமைத்து இருவருடங்களுக்குள் எதனையும் செய்ய முடியாது. தற்போது சர்வதேசத்துடனான உறவு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எதிரணியின் செயற்பாட்டால் ஐக்கிய தேசியக் கட்சியுடனான ஒப்பந்த காலத்தை ஐந்து வருடங்களுக்கு நீடிக்க வேண்டும் என்றார்.