இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசால் மெண்டிஸ் டெஸ்ட் அரங்கில் தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்து துடுப்பெடுத்தாடி வருகிறார். 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறி வருகின்ற நிலையில் தனியொரு வீரராக குசல் மெண்டிஸ் தற்போது வரை 125 ஓட்டங்களை பெற்று அணியை வலுப்படுத்தி வருகின்றார்.

மறுமுனையில் உப தலைவர் சந்திமல் 24 ஓட்டங்களை பெற்று துடுப்படுத்தாடி வருகின்றார்.

இலங்கை அணி தற்போதுவரை 4 விக்கட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்று 86 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.