பேஸ்புக்கில் வலைவீசிய பெண்களை கோவிலுக்கு அழைத்து தனது மனைவியை அக்காவென அறிமுகப்படுத்தி, பின்னர் பெண்ணின் விருப்பத்துடன் அல்லது கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து நகை, பணத்தை கொள்ளையிட்ட இளம் ஜோடியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் இந்தியாவின் திருப்பூரில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

திருச்சி மாவட்டம் நாவல்பட்டு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். அவரைத் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த மாணவி திடீரென நாவல்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழுதபடி வந்து வாக்குமூலமளித்துள்ளார்.

தன்னை ஒரு வாலிபர் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாகவும், தன்னை பலாத்காரம் செய்து விட்டு 2 பவுண் நகையைப் பறித்துச் சென்று விட்டதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

அவருடன் ஒரு பெண் வந்ததாகவும், அப்பெண்ணை அந்த நபர் அக்கா என்று கூறியதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அந்த இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இருவரும் நேற்று முன்தினம் திருச்சி பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். 

அவர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது வெளியான தகவல்களைக் கேட்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர்கள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலம் வருமாறு,

சம்பந்தப்பட்ட இளைஞரின் பெயர்  குரு தீனதயாளன் வயது  27 . பட்டப்படிப்பு முடித்தவர். திருப்பூர் மாவட்டம் நொச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். தொழில் இல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் பேஸ்புக்கில் சற்று கவனத்தைத் திருப்பினார்.

பேஸ்புக் மூலமாக அவருக்கு அறிமுகமானார் சென்னையைச் சேர்ந்த பிரியதர்ஷினி. 25 வயதான அவரை காதலித்த தீனதயாளன் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் கையில் செலவுக்குப் பணம் இல்லாமல் இருவரும் கஷ்டப்பட்டனர்.

இந்த நிலையில் இருவருக்கும் குறுக்குப் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. பேஸ்புக் மூலமாக இளம் பெண்களுக்கு வலை வீசுவது, வலையில் விழும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக உறுதி அளிப்பது. அவர்களை தனி இடத்திற்கு வரவழைத்து முதலில் அவர்களை அனுபவிப்பது, அதன் பிறகு அவர்களிடமிருந்து நகை, பணத்தைப் பறித்துக் கொள்வது. இதுதான் குரு தீனதயாளன் கொடுத்த திட்டம். இதற்கு ஆமோதித்தார் அவரது காதல் மனைவி பிரியதர்ஷினி.

இதையடுத்து பெண்களுக்கு வலை வீச ஆரம்பித்தார் தீனதயாளன். அதில் சிலர் சிக்கினர். அவர்களை எங்காவது ஒரு கோவிலுக்கு வரவழைப்பார்கள். வரும் பெண்ணிடம், இது என் அக்கா என்று கூறி தனது மனைவியை அறிமுகப்படுத்துவாராம். அக்காவுக்கு பிடித்திருந்தால் எனக்கும் சம்மதம் என்பாராம். வரும் பெண்ணைப் பார்த்து பிரியதர்ஷினி சம்ம்தம் என்று தெரிவித்ததும், அந்தப் பெண்ணின் விருப்பத்துடன் அல்லது கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விடுவாராம். பிறகு அவரது நகை, பணத்துடன் தப்பி விடுவாராம்.

கல்லூரி மாணவிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வரும் பெண்கள், காதலித்து திருமணம் செய்து பின்னர் பிரிந்தவர்கள் என தெளிவாக குறி வைத்து வேட்டையாடியுள்ளனர் தீனதயாளனும், அவரது மனைவியும். பொலிலிஸார் இருவரையும் தற்போது கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.