இந்த அரசாங்கத்திடம் "சாது சாது" என்றே கூற வேண்டும் - நளின் பண்டார

24 Nov, 2020 | 09:09 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தின் காட்டு சட்டம் என்ன என்பதற்கு பிள்ளையானின் விடுதலை போதுமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார். 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒரு சிலரது கைகளில் நீதிமன்ற அதிகாரம் சென்றுவிட்டது எனவே இந்த அரசாங்கத்திடம் "சாது சாது" என்றே கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற  நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,

அப்பாவி மக்களின் வழக்குகளை விசாரிக்க முடியாத விதத்தில் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளது, ஆனால் வி.ஐ.பி களின் வழக்குகள் விசாரிக்கப்பட்டு அவர்கள் விடுதலையாகிக்கொண்டுள்ளனர். குற்றவாளிகள் என சிறையில் இருந்த பலர் அண்மைக்காலமாக விடுதலையாகுவதை பார்க்க முடிகின்றது. 

இன்று பிள்ளையான் விடுதலையாகியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. எனவே வி.ஐ.பிகளுக்கான நீதிமன்றம் திறக்கப்பட்டு விடுதலையாகிக்கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் காட்டு சட்டம் என்ன என்பதற்கு பிள்ளையானின் விடுதலை போதுமானது,

தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்கள், அரந்தலாவையில் பெளத்த பிக்குகளை கொன்றவர்கள் இன்று விடுதலையாகி வருகின்றனர். எனவே இந்த அரசாங்கத்திடம் "சாது சாது" என்றே கூற வேண்டும். 

தேரர்களின் தோளில்  ஏறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று பெளத்தர்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துவிட்டது. நாட்டில் காட்டு சட்டங்களும் காட்டு நீதிமன்றங்களும் இயங்கிக்கொண்டுள்ளது. 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒரு சிலரது கைகளில் நீதிமன்ற அதிகாரம் சென்றுவிட்டது என்பதற்கு இதுவே நல்ல உதாரணமாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47