தசாப்தத்துக்கான ஐ.சி.சி. விருதுகள் பரிந்துரையில் நான்கு இலங்கை வீரர்கள்

Published By: Vishnu

25 Nov, 2020 | 08:25 PM
image

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி) ஆண்டுதோறும் விருதுகளை அறிவிக்கின்றது.

இந் நிலையில் இம்முறை முன்னைய கிரிக்கெட் தசாப்தத்தினை குறிக்கும் வகையில் பல்வேறு விருதுகளுக்கான வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் நான்கு இலங்கை வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார ஐ.சி.சி ஆண் கிரிக்கெட் வீரருக்கான சார் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுக்காக பரிந்துறைக்கப்பட்டுள்ளார்.

ரங்கன ஹேரத் ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்காக பரிந்துறைக்கப்பட்டுள்ளார்.

லசித் மாலிங்க ஐ.சி.சி ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்காக பரிந்துறைக்கப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் '(Spirit of Cricket) விருதுக்காக 2013 வெற்றியாளர் - மகேலா ஜெயவர்தன  பரிந்துறைக்கப்பட்டுள்ளார்.

கடந்து 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்  போட்டிகளில் சிறந்து விளங்கியவர்களுக்காக வழங்கப்படும் இவ் விருதுக்கு தமக்கு பிடித்த வீரர்களுக்கு  நவம்பர் 25 புதன்கிழமை முதல் டிசம்பர் 16 புதன்கிழமை  icc-cricket.com/awards  ஐ.சி.சி இணையத்தளத்திற்கு பிரவேசித்து ரசிகர்கள் வாக்களிக்க முடியும்.

 

 

 

தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் ஆண் வீரர்கள்:

  • விராட் கோலி (இந்தியா)
  • ஜோ ரூட் (இங்கிலாந்து)
  • கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
  • ஏ.பி.டி.வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)
  • ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)
  • ரவிச்சரந்திரன் அஸ்வின் (இந்தியா)
  • குமார் சங்கக்கார (இலங்கை)

தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் பெண் வீராங்கனைகள்:

  • எல்லிஸ் பெர்ரி (அவுஸ்திரேலியா)
  • மெக் லானிங் (அவுஸ்திரேலியா)
  • சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து)
  • ஸ்டாஃபனி டெய்லர் (மே.இ.தீவுகள்)
  • சாரா டெய்லர் (இங்கிலாந்து)

 

தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள்:

  • விராட் கோலி (இந்தியா)
  • ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து)
  • ரங்கன ஹேரத் (இலங்கை)
  • ஜோ ரூட் (இங்கிலாந்து)
  • யஷிர் சஹா (பாகிஸ்தான்)
  • ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)
  • கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)

 

தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள்:

  • மகேந்திர சிங் தோனி (இந்தியா)
  • விராட் கோலி (இந்தியா)
  • ரோகித் சர்மா (இந்தியா)
  • லசித் மலிங்க (இலங்கை)
  • குமார் சங்கக்கார (இலங்கை)
  • மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)
  • ஏ.பி.டி.வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)

 

தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகள்:

  • மிதாலி ராஜ் (இந்தியா)
  • ஜூலன் கோஸ்வாமி (இந்தியா)
  • மெக் லானிங் (அவுஸ்திரேலியா)
  • எல்லிஸ் பெர்ரி (அவுஸ்திரேலியா)
  • சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து)
  • ஸ்டாஃபனி டெய்லர் (மே.இ.தீவுகள்)

 

தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் 20:20 கிரிக்கெட் வீரர்கள்:

  • ரோகித் சர்மா (இந்தியா)
  • விராட் கோலி (இந்தியா)
  • ஆரோன் பின்ஞ்ச் (அவுஸ்திரேலியா)
  • கிறிஸ் கெய்ல் (மே.இ.தீவுகள்)
  • ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
  • லசித் மலிங்க (இலங்கை)
  • இம்ரான் தாகீர் (தென்னாபிரிக்கா)

 

தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் 'Spirit of Cricket' வீரருக்கான விருது:

  • விராட் கோலி (இந்தியா)
  • மகேந்திரசிங் தோனி (இந்தியா)
  • கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
  • அன்யா ஷ்ரப்சோல் (இங்கிலாந்து)
  • மிஸ்பா உல்-ஹக் (பாகிஸ்தான்)
  • பிரெண்டன் மெக்கல்லம் (நியூஸிலாந்து)
  • கேத்ரின் ப்ரண்ட் (இங்கிலாந்து)
  • மஹேல ஜெயவர்தன (இலங்கை)
  • டேனியல் விக்டோரி (நியூஸிலாந்து)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22