பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியுமென்றால் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது ? சபையில் சார்ள்ஸ் எம்.பி. கேள்வி

24 Nov, 2020 | 09:15 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியும் என்றால் எந்தவித சாட்சியும் இல்லாது வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்ட எமது தமிழ் இளைஞர்களை ஏன் பிணையில் விடுவிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அரசாங்க சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இராஜாங்க அமைச்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,

சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இன்று அரசாங்கம் கூறுவது என்னவென்றால் அவர் சாட்சி இல்லாமல் சிறையில் இருந்துள்ளார் என்ற தர்க்கத்தை முன்வைக்கின்றனர். 

இவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் எமது இளைஞர்கள் சாட்சிகள் இல்லாது வெறும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 வருடங்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதனையும் அனைவரும் மறந்துவிடக்கூடாது. பிள்ளையானுக்கு பிணை கொடுக்க முடியும் என்றால் 20 வருடங்களாக சிறையில் உள்ள எமது அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தவர்களுக்கு பிணை வழங்க முடியாது என அரசாங்கதினர் எம்மிடம் கூறினார்கள். அப்படியென்றால் பிள்ளையான் எவ்வாறு பிணையில் விடுதலையாக முடியும். 

பயங்கரவாத தடை சட்டத்தில் எமது தமிழ் இளைஞர்கள் பொய் குற்றச்சாட்டில் வெறுமனே குற்ற ஒப்புதல் சாட்சியங்களை வைத்துகொண்டு தடுத்து வைத்திருப்பது நியாயமானதா. இது வெறுமனே அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் நடைபெறும் செயற்பாடாகும். அரசாங்கத்தை ஆதரித்த காரணத்தினால் தான் பிள்ளையான் விடுதலையாகியுள்ளார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19