கணவரின் கனவுகளை தொடர இராணுவத்தில் இணைந்த மனைவி!

Published By: Jayanthy

24 Nov, 2020 | 09:07 PM
image

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கனிகா என்ற பெண் தனது கணவரின் இராணுவ பணியை தொடர்வதற்காக தனது முகாமைத்துவ பணியை துறந்து முறையாக தேர்வுகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபட்டு தற்போது இந்திய ராணுவத்தில் இணைந்துள்ளார்.

இராணுவ வீரரான இவரின் கணவர் கௌஸ்தூப் ரானே, கடந்த 2018 ம் வருடம் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுடனா மோதலில் உயிரிழந்துள்ளார்.

இறந்த கணவரின் இராணுவ பணியை.... மன உறுதியோடு தொடரும் மனைவி.... நெகிழ  வைக்கும் சம்பவம்...!! • Seithi Solai

இதையடுத்து குறித்த இராணுவ வீரருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட போது அதனை, அவருடைய மனைவியான கனிகா  பெற்றுள்ளார். 

இந்நிலையில்,  கணவரின் மறைவுக்குப் பிறகு கணவர் பணியாற்றிய இராணுவத்தில் தான் பணியாற்ற வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட கனிகா தனது முகாமையாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பின்னர் அரசு தேர்வு எழுதி அதில் சித்தி பெற்று சென்னை இராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து தற்போது அவரும் இராணுவத்தில் இணைந்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், “என்னுடைய இந்த முடிவு எளிதானதாக இல்லை. என்னுடைய கணவர் நான் என் கனவுகளை தொடர வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து வந்தார். அனால் இப்போது அவருடைய கனவை நான் பின் தொடர்கிறேன். 

இதேநிலை எனக்கு வந்திருந்தாலும் அவரும் இதைத்தான் செய்திருப்பார். பயிற்சிக்கு வருவதற்கு முன்பாக 400 மீட்டர் கூட ஓட முடியாது. இப்போது 40 கிலோமீட்டர் கூட என்னால் ஓட முடியும். முயற்சியும், மனதிடமமும் இருந்தால் எல்லாமே சாத்தியமாகும்” என்று கூறியுள்ளார். 

இவரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right