கொழும்பு மக்களுக்கு கொவிட் நிதியத்தினால் நிவாரணம் வழங்க வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

Published By: Digital Desk 3

24 Nov, 2020 | 11:40 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு நகரில் பெரும்பகுதி மூடப்பட்டு 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.‍ கொவிட் நிதியத்திலுள்ள நிதியை இந்த மக்களுக்காக செலவிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் இருக்கும் நிறுவனங்ளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் 19 பிரச்சினையுடன் அரசு முன்வைக்கும் சில விடயங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் சிலவற்றை ஏற்கமுடியாதுள்ளது. நீதித்துறையை அரசியல் தலையீடின்றி சுயாதீனமாக செயற்பட 19 ஆவது திருத்தத்தினூடாக வழியமைக்கப்பட்டது.

பிள்ளையான் மட்டக்களப்பில் அபிவிருத்தி குழுவில் பங்கேற்கிறார். தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு பாராளுமன்றம் இடமளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வந்த அரசு காட்டுச்சட்டத்தை செயற்படுத்துகிறது. 

ஜனாதிபதிக்கு தனக்கு தேவையானவர்களை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க முடியும். முன்னர் சுயாதீனமாக தெரிவு இடம்பெற்றது. தற்போது அமைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற பேரவைக்கு பரிந்துரை மாத்திரமே செய்ய முடியும். ஜனாதிபதியின் நியமனங்களை நிராகரிக்க அதிகாரம் இல்லை.

குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.இது பாரதூரமானது.மக்களின் இறைமையை பாதுகாத்து நீதிமன்றங்கள் செயற்பட வேண்டும்.எந்த அரசாங்கம் வந்தாலும் நீதிமன்ற இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அவை ஆட்சி மாறினாலும் நடுநிலையாக செயற்பட வேண்டும்.   இலஞ்ச ஆணைக்குழுவிற்கு ஈவா வணசுந்தரவை நியமிக்க தயாராகின்றனர். அவர் பிரதமருக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அப்படியானால் அரசாங்கத்தின் ஊழல் தொடர்பில் அவர் தேடுமா என்ற சந்தேகம் எழுகின்றது.

மேலும் கொவிட் 19 நிதியத்திற்கு மொத்தமாக 1,640 மில்லியன் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அதில் 67 மில்லியன் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் பெரும்பகுதி மூடப்பட்டுள்ளது. 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. கொவிட் நிதியத்திலுள்ள நிதியை இந்த மக்களுக்காக செலவிட வேண்டும்.நிவாரண பொதி வழங்குவதாக வாக்குறுதி அளித்தாலும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36