கொரோனா தடுப்பு மருந்து கொள்வனவில் அரசாங்கம் திட்டமிடலின்றி செயற்படுகின்றதா? - கரு கேள்வி

Published By: Digital Desk 3

24 Nov, 2020 | 10:44 AM
image

(நா.தனுஜா)

கொவிட் - 19 வைரஸ் தடுப்புமருந்தைக் கொள்வனவு செய்வதற்காக எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டத்தில் பிரத்தியேகமாக நிதி ஒதுக்கப்படவில்லை. இதுவிடயத்தில் அரசாங்கம் முறையான திட்டமிடலின்றி செயற்படுகின்றதா? அல்லது இதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் உணரவில்லையா? என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கரு ஜயசூரிய 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் கொவிட் - 19 வைரஸ் தடுப்புமருந்தைக் கொள்வனவு செய்வதற்கு வரவு - செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதுவிடயத்தில் அரசாங்கம் முறையான திட்டமிடலின்றி செயற்படுகின்றதா? அல்லது இதன் முக்கியத்துவத்தை உணரவில்லையா? எதுஎவ்வாறெனினும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை இலங்கை மக்களுக்கு இருக்கிறது என்பதுடன் நாட்டுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதேவேளை தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், புதிதாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை சீரான கோட்டில் பயணிக்கிறது. இந்நிலையில் நாட்டின் சுகாதாரத்துறையினால் கையாள முடியாதளவிற்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.

எனினும் கொவிட் - 19 வைரஸ் தடுப்புமருந்தை அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வழங்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையிலேயே இதன் நீண்டகால வெற்றி தங்கியிருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:14:36
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29