மாவீரர் நாள் நினைவேந்தல் தடை தொடர்பான வழக்கின் கட்டளை ஒத்திவைப்பு

Published By: Digital Desk 4

24 Nov, 2020 | 10:43 AM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பொலிஸ் நிலையங்களினால்  கடந்த 20.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று, இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தல் மேற்கொள்வதற்கு 46 பேருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றில் தடை உத்தரவினைப் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தினால் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவுக்கு எதிராக 23.11.2020 நேற்றைய தினம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

அதில் குறிப்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், கமலநாதன் விஜிந்தன், திருச்செல்வம் ரவீந்திரன், தவராசா அமலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ராமலிங்கம் சத்தியசீலன், துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் நிர்வாக உறுப்பினர் சுப்பிரமணியம் பரமானந்தம், தமிழ் ஆர்வலர்களான தம்பையா யோகேஸ்வரன்,ஞானதாஸ் யூட்பிரசாந்த், சிமித்கட்சன் சந்திரலீலாஆகியோர் அடங்கிய பதின்நான்கு பேர் கொண்ட குழுவினராலேயே இவ்வாறு நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதற்கமைய 23.11.2020 நேற்று குறித்த வழக்கு விசாரணைகள் நீதிபதி எஸ். லெனின் குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகளில் தடைக்கட்டளை பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக மன்றில் ஆஜரான பிரதான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், குறித்த மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மன்றில் முன்வைத்த கடுமையான வாதத்தினையடுத்து, குறித்த வழக்கின் கட்டளையினை வழங்குவதற்காக நீதவான் எதிர்வரும் 25 ஆம் திகதி புதன் கிழமைக்கு வழக்கினைத் திகதியிட்டுள்ளார்.

மேலும் நேற்றைய வழக்கு விசாரணைகள் தொடர்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

பொலிஸார் மாவீரர் தின நினைவேந்தலை நடாத்துவதனை தடுக்கும்படியான கட்டளைகளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே எடுத்திருந்தார்கள்.

இந்த உத்தரவுகளானது 106(1) என்கின்ற பிரிவின் கீழே எடுக்கப்பட்ட உத்தரவுகள் அதனை 106(4)இன் கீழே நீதிமன்றம் நீக்கலாம். அல்லது மாற்றலாம் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

அதன் பிரகாரம் 23.11.2020 நேற்று நகர்த்தல் பத்திரங்கள் இந்த ஆறு வழக்குகளிலேயும் பதிவு செய்து திறந்த மன்றிலே இந்தச் சபைக்கட்டளைகள் நீக்கப்படவேண்டும் என்று சமர்ப்பணங்கள் செய்திருக்கின்றேன்.

குறித்த நீதவானுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நியாயதிக்கமானது அத்தியாயம் 09இன் கீழே புதுத் தொல்லைகளைத் தடுப்பதற்கான நியாயாதிக்கமாகும். அப்படியான நியாயாதிக்கத்தின் கீழே இங்கே கொடுக்கப்பட்ட கட்டளைகள் கொடுப்பதற்கு நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் கொடுக்கப்படவில்லை என்ற பிரதானமான வாதத்துடன், குற்றச்சம்பவங்களுடன் யாராவது ஈடுபட்டால் அதற்கு நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உரிமையுண்டு.

ஆனால் ஒரு குற்றச்செயலைச் செய்யக்கூடாது, செய்யவேண்டாம் என்று தடுப்பதற்கான உத்தரவுகளை இந்த அத்தியாயத்தின் கீழ் பெறமுடியாது என்ற வாதத்தினையும் நீதிமன்றத்தின் முன்பாக சமர்ப்பணமாகச் செய்திருக்கின்றோம்.

இதனைச் செவிமடுத்த நீதவான் இது தொடர்பாக தன்னுடைய கட்டளையினை எதிர்வரும் 25 ஆம் திகதி புதன்கிழமை வழங்குவதாகக் கூwp வழக்கை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு திகதியிட்டிருக்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58