நாட்டில் அபாயம் குறைந்துள்ளதாகக் கூற முடியாது : மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் வைத்தியர் ஹேமந்த ஹேரத்

24 Nov, 2020 | 10:23 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு சீரான கோட்டில் சென்று கொண்டிருக்கிறது. எனினும் நாடு முழுமையாக சுமூகமான நிலையை அடைந்துள்ளது என்று உறுதியாகக் கூற முடியாது எனத் தெரிவித்த சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து உறுதியாகக் கூற முடியும் எனவும் குறிப்பிட்டார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். எனினும் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறித்தவொரு சமநிலையை அடையக் கூடியளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதனை தற்போது உறுதியாகக் கூற முடியாது.

மாறாக எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து உறுதியாகக் கூற முடியும். நாளொன்றுக்கு இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் மேல் மாகாணத்திலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலுமே இனங்காணப்படுகின்றனர்.

இது வரையில் 6,703 படுக்கைகளில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,428 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை 15 தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள 147 படுக்கைகளில் 5 படுக்கைகளில் மாத்திரமே தொற்றாளர்கள் உள்ளனர். கடந்த 24 மணித்தியாலளங்களில் சுமார் 10,000 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது ஏனைய பிரதேசங்களில் குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணப்படுகின்றனர். எனவே எதிர்வரும் நாட்களில் அதிகளவான பரிசோதனைகளை முன்னெடுத்து தொற்றாளர்களை துரிதமாக இனங்காண்பதே எமது இலக்காகும்.

அதற்கமைய முடக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படக் கூடிய நிலை ஏற்படும். நாம் எதிர்பார்த்ததைப் போன்று சிறு சிறு கொத்தணிகள் உருவாகின்றன. எனவே தான் தினமும் சுமார் 400 என தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

எனினும் முன்னர் இனங்காணப்பட்டதைப் போன்றே ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் இனங்காணப்படும் அபாயம் குறைவடைந்துள்ளது. அதற்காக நாம் எமது செயற்பாடுகளை நிறுத்தவில்லை. எனவே எதிர்வரும் நாட்களில் நிலைமை சுமூகமாகும்.

ஊரடங்கு அற்ற அல்லது ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் தற்போது தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். எனினும் பல்வேறு விடயங்களையும் கவனத்தில் கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் குறித்து தீர்மானிக்கப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:22:17
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52