Huawei Consumer Business Group, 2016 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதிக்கான நிதியியல் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது. 

2016 ஆம் ஆண்டு முதல் அரையாண்டின் விற்பனை வருமானம், இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41%  இனால் அதிகரித்து, 77.4 பில்லியன் சீன யுவான் தொகையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25% அதிகரிப்புடன் 60.56 மில்லியனை எட்டியுள்ளது.

IDC இன் புள்ளிவிபரங்களின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு முதல் அரையாண்டுப் பகுதியில் சர்வதேசரீதியாக ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மாட்போன்களின் எண்ணிக்கை வெறும் 3.1% இனால் வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், Huawei அடையப்பெற்றுள்ள வளர்ச்சியானது தொழிற்துறையில் மிகவும் சிறப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

Huawei Consumer Business Group நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான றிச்சர்ட் யு கூறுகையில், 

“ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா, மத்திய ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா அடங்கலான வளர்ச்சியடைந்துவருகின்ற சந்தைகளில், குறிப்பாக பாரம்பரியமான, உயர் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் சந்தைகள் விரைவாக வளர்ச்சியடைந்து வருவதை நாம் கண்டுள்ளோம்.”

“மிகவுயர்ந்த மட்டத்தில் போட்டித்திறன் காணப்படுகின்ற ஸ்மாட்போன் சந்தையில் காத்திரமான வளர்ச்சியை நாம் தொடந்தும் பேணிவருகின்றமையானது, புத்தாக்கத்தின் மீது Huawei கொண்டுள்ள நீண்ட கால அடிப்படையிலான அர்ப்பணிப்புடனான ஈடுபாடு, நுகர்வோரின் தேவைகளை சிறப்பாக எதிர்வுகூறல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் கவனம் செலுத்துகின்ற இரட்டை மூலோபாயம் ஆகியவற்றிற்கு சான்று பகர்கின்றது.

எதிர்காலத்தைக் கருதுகையில், நுகர்வோருக்கு மிகச் சிறந்த மட்டத்திலான சேவையை வழங்குவதற்கு எமது தொழிற்துறைப் பங்காளர்களுடன் நாம் தொடர்ந்தும் பணியாற்றி, தொழில்நுட்பம், தரம் மற்றும் நவீன வடிவம் ஆகியவற்றை இணைக்கும் புத்தாக்கமான புதிய உற்பத்திகளை வடிவமைப்போம்.”

இலங்கையில் தற்போது இரண்டாம் இடத்திலுள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக Huawei திகழ்வதுடன், அடுத்த சில காலாண்டுகளில் நாட்டில் முதல் இடத்தில் திகழுகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக மாறவுள்ளது. 

இலங்கையில் முதலிடத்தில் திகழும் வர்த்தகநாமமான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி இனால் Huawei சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றது. 2016 ஆம் ஆண்டில் கணிசமான வளர்ச்சியை Huawei எதிர்பார்த்துள்ளதுடன், அது கடந்த ஆண்டிலும் ஈடுஇணையற்ற சாதனைகளைப் படைத்திருந்தது. 

GFK  இன் புள்ளிவிபரங்களுக்கு அமைவாக இலங்கையில் 2016 ஆண்டின் முதற்காலாண்டில் 23.3% சந்தைப் பங்கினை Huawei பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் நாட்டில் இரண்டாம் இடத்தில் திகழ்ந்து வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் என்ற தனது ஸ்தானத்தை மேலும் விரைவுபடுத்தி வருகின்றது.

2016 ஆம் ஆண்டில், உலகில் மிகவும் பெறுமதிகொண்ட 100 வர்த்தகநாமங்களில் ஒன்றாக Huawei மீண்டும் பெயரிடப்பட்டுள்ளது. 18,652 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை என்ற மதிப்பீட்டை Huawei கொண்டுள்ளதுடன், 2015 ஆம் ஆண்டில் 70 ஆவது ஸ்தானத்திலிருந்த Huawei> 2016 ஆம் ஆண்டில் 50 ஆவது ஸ்தானத்திற்கு முன்னேறியுள்ளது.

ஸ்மார்ட்போன், wearable, smart home மற்றும் cloud சந்தைகளில் தனது இருப்பினை இன்னும் வலுவாக்கும் முயற்சிகளை Huawei தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதுடன் பூரண தீர்வுகள் மற்றும் தளமேடை சேவை வழங்குனராக மாறி, நுகர்வோர் தமது வாழ்வில் இணைப்பைப் பேணுவதற்கு இன்னும் அதிக சௌகரியமான மற்றும் அறிவார்ந்த வழிமுறைகளை வழங்கும் பயணத்தைத் தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றது.