சர்வதேசத்தை பகைத்துக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது : கிரியெல்ல சாடல்

Published By: J.G.Stephan

23 Nov, 2020 | 09:32 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

இறக்குமதிகளை தடை செய்து அரசாங்கம் சர்வதேசத்தை பகைத்துக்கொண்டு செல்லவே முயற்சிக்கின்றது. நவீன உலகில் தனிமையாக வாழமுடியாது. நாடுகளுக்கிடையில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் இனக்கப்பாட்டுடன் செல்வதன் மூலமே நாட்டை முன் கொண்டுசெல்லலாம் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் சர்வதேசத்தை பகைத்துக்கொண்டு செயற்படவே முயற்சிக்கின்றது. இறக்குமதி தடைசெய்யும் போது எமது ஏற்றுமதிகளும் தடைசெய்யப்படுகின்றது. அரசாங்கத்தின் இறக்குமதி தடைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எச்சிரிக்கை விடுத்திருக்கின்றது.

 

ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 25 வீதம் எமது பொருட்களை கொள்வனவு செய்கின்றது. அதேபோன்று அமெரிக்காவும் கொள்வனவு செய்கின்றது. ஆனால் சீனா ஒருவீதமே எமது பொருட்களை கொள்வனவு செய்கின்றதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி  அரசாங்கத்தில் நாங்கள் ஐக்கிய நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை செய்திருந்தோம். 

மேலும் ஏகாதிபத்திய ஆட்சி இருக்கும்  நாடுகளுக்கு முதலீட்டாளர்கள் வருவதில்லை. சீனாவில் சுயாதீன நீதிமன்றம் அமைக்கப்படும்வரை 3வருடங்கள் அங்கு முதலீட்டாளர்கள் செல்லவில்லை. எமது நாட்டிலும் 20ஆவது திருத்தம் மூலம் நீதிமன்ற சுயாதீனத்தன்மை இல்லாமல் போயுள்ளது.

19ஆம் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீன செயற்பாடுகள் 20ஆம் திருத்தம் மூலம் இல்லாமல்போயுள்ளது. அதனால் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை ஜனாதிபதி பெயரிடுபவர்களை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

அரசியலமைப்பில் 75 நியமனங்கள்  இருக்கின்றன. அவை அனைத்துக்குமான நியமனங்களை ஜனாதிபதியே மேற்கொள்வார். அதுதொடர்பில் யாரிடமும் ஆலோசனை கேட்கவேண்டியதில்லை. இன்று நாட்டில் எந்த ஆலோசனையும் யாரிடமும் கேட்பதில்லை. எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை அரசாங்கம் கேட்பதில்லை. 

கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதுடன் விமான நிலையத்தை மூடுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசதான் ஆரம்பமாக தெரிவித்தார். ஆனால் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை. இன்று தாய்வான் கொரோனாவை கட்டுப்படுத்தி இயல்பு நிலைக்கு சென்றிருக்கின்றது. அதற்கு காரணம், அந்த நாடு ஆரம்பமாக விமான நிலையத்தை மூடியதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41