மாவீரர் நாள் நினைவேந்தல் தடைக்கு எதிராக நகர்த்தல் பத்திரம் தாக்கல்

23 Nov, 2020 | 03:09 PM
image

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, மாவீரர் தின நிகழ்வுகளை  மேற்கொள்வதற்கு  41 பேருக்கு எதிராக  கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,முள்ளியவளை,மல்லாவி மற்றும் மாங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸாரால் தமது பொலிஸ் பிரிவுகளில் நிகழ்வை நடத்துவதற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளையினை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி  தடையுத்தரவுக்கு எதிராக  தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான பன்னிரெண்டுபேர் கொண்ட குழுவினரால் இன்று திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் (மோசன்)தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டவாளர்கள்  சிறிது நேரத்தில் மன்றில் ஆஜராகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் நீதிமன்றால் மாவீரர் நாளுக்கு தடைவிதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக, அங்கு மன்றில் ஆஜராவதற்காக எம்.ஏ.சுமந்திரன் சென்றுள்ள நிலையில் அந்த வழக்கின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் 13 பேருக்கும் முள்ளியவளை பொலிஸ் பிரிவில் 11 பேருக்கும் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் 4 பேருக்கும் மாங்குளம் பொலிஸ் பிரிவில் 6 பேருக்கும் மல்லாவி பொலிஸ் பிரிவில் 7 பேருக்குமாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 41 பேருக்கு மாவீரர் நாளுக்கான தடை உத்தரவினை பிறப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றினைக் கோரியிருந்த நிலையிலேயே, நீதிமன்று இவ்வாறு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

அதற்கமைய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட தடைக்கட்டளைகளை, கடந்த சனிக்கிழமையன்று பொலிஸார் உரியவர்களிடம் கையளித்திருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தினால் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள தடைக்கட்டளையினை மீள் பரிசீலணைசெய்யுமாறு கோரி, தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், கமலநாதன் விஜிந்தன், திருச்செல்வம் ரவீந்திரன், தவராசா அமலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ராமலிங்கம் சத்தியசீலன், துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் சற்குணநாதன் சுயன்சன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, தமிழ் ஆர்வலர்களான தம்பையா யோகேஸ்வரன்,ஞானதாஸ் யூட்பிரசாந்த், சிமித்கட்சன் சந்திரலீலா ஆகியோர் அடங்கிய பன்னிரெண்டு பேர் கொண்ட குழுவினராலேயே இவ்வாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52