ஜனவரியில் 1000 ரூபா இல்லையெனில் போராட்டம் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

Published By: Digital Desk 4

23 Nov, 2020 | 01:58 PM
image

(க.பிரசன்னா)

வரவு - செலவுத்திட்டத்தில் அறிவித்தபடி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் 1000 ரூபா சம்பளவுயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் இல்லையெனில் ஜனவரி மாதத்துக்குப்பின்னர் 1500 ரூபாவை கோரி புதிய சம்பள போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் சமன் குமார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக கூறி ஒரு வருடம் கடந்த நிலையிலும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்திலும் அதன்பின்னர் அமைச்சராகவிருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் என பலரும் 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை பெற்றுக்கொடுக்கவில்லை.

இவ்வாறு கடந்த நான்கரை வருடங்களாக மலையக மக்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு வருகின்றது. இம்முறையாவது அதனை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.

இவ்விடயத்தில் சகலரும் ஒத்துழைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் தட்டிக்கழிப்புச் செய்து விட வேண்டாம்.

எனவே வீரவசனம் பேசி போலி அறிக்கைகளை விடாமல், இம்முறை தை மாதத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அனைவரும் முயற்சிக்க வேண்டுமெனவும் அவ்வாறில்லையெனில் ஜனவரி மாதத்துக்குப்பின்னர் 1500 ரூபாவை கோரி புதிய சம்பள போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47