ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனிவாவில் உள்ள கொயின்டிரின் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என ஜெனிவா பொலிஸாருக்கு காலை 9.30 மணியளவில் தொலைபேசி வாயிலாக எச்சரிக்கை தகவலொன்று வந்துள்ளது.

இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு விரைந்து சென்று பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர், மேலும் பயணிகளையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு, விமான நிலையத்தில் ஏதேனும் வெடிகுண்டு உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.ஆனால், வெடிகுண்டுகள் ஏதேனும் தென்படவில்லை, இந்நிலையில் தங்களுக்கு வந்த அழைப்பு குறித்து விசாரணையை நடத்தியதில் அது போலியான எச்சரிக்கை தகவல் என தெரியவந்துள்ளது.

மேலும், விசாரணையில் மனைவி ஒருவர், தனது கணவர் தன்னை மட்டும் தனியாகவிட்டு பயணம் செய்வதால் பொறாமை கொண்டமையால், தனது கணவரை தடுத்துநிறுத்துவதற்காக இதுபோன்ற போலியான தகவலை பொலிஸாருக்கு கூறியுள்ளாரென தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பயணிகள் மற்றும் பொலிஸாரின் நேரத்தினை வீணடித்ததோடு மட்டுமல்லாமல், இதுபோன்ற போலியான தகவலை பரப்பி பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய இப்பெண்மணி மீது ஜெனிவா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது வழக்கு விசாரணையில், இவருக்கு 30,000 யூரோ அபராதமும்,2 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.