கையடக்கதொலைபேசியில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தமையால் காலை உடைத்த கணவன்

Published By: Raam

27 Jul, 2016 | 11:12 PM
image

மனைவி வெகுநேரம் கையடக்கதொலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தமையால் ஆத்திரம் அடைந்த கணவன், அவரின் காலை உடைத்துள்ளார். 

கோவை சாய்பாபா, கே.கே.புதூரில் வசிப்பவர் மணிகண்டன். இவர் வாகன சாரதியாக பணிபுரிகிறார். நேற்று காலை, இவரின் மனைவி அன்னபூரணி(29) கையடக்கதொலைபேசியில் யாரிடமோ வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்தார். 

இதைக்கண்ட மணிகண்டன், யாரிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அன்னபூரனி, தனது உறவினர் ஒருவருடன் என்று பதில் கூறியுள்ளார். ஆனாலும், சந்தேகம் அடைந்த மணிகண்டன், இதுபற்றி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சண்டையின் காரணமாக, மணிகண்டன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அன்னப்பூரணின் காலில் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. அவரை,  மணிகண்டன் கோவை அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

 இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று வைத்தியர்கள் வினவியபோது அதற்கு, மணிகண்டன் வீட்டில் நடந்ததை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், வைத்தியவாலை வளாகத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இதுபற்றி முறைப்பாடு செய்துள்ளனர். 

இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25