நோட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஒஸ்போன் மிட்போட் தோட்டத்தில் வேலை செய்துகெண்டிருந்தவர்களை தாக்க முற்பட்ட சிறுத்தையை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மீட்டுள்ளனர்.  

இன்று காலை தேயிலை மலையில் வேலை செய்துகெண்டிருந்தவர்களை சிறுத்தை 28 வயதுடைய சண்முகநாதன் என்பவரை தாக்கியதால் உடனடியாக தொழிலாளர்கள் குறித்த சிறுத்தையை அடித்து கொன்றுள்ளனர்.

காயமுற்ற நபர் ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் இறந்த சிறுத்தையை எடுத்துசென்றுள்ளனர்.