பல மாற்றங்களுடன் புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியீடு!

Published By: Jayanthy

22 Nov, 2020 | 11:59 PM
image

இரண்டு புதிய அமைச்சுக்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தொழிநுட்ப அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சு ஆகிய புதிய இரண்டு அமைச்சுகளே இவ்வாறு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இலங்கையில் அமைச்சரவையில் உள்ள அமைச்சுக்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்க உள்ளது.

அத்துடன் இவ் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பல அமைச்சுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி,

 கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரியங்களை நிர்வகிப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

முன்னதாக ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இருந்த இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டி.ஆர்.சி.எஸ்.எல்) மற்றும் அதன் துணை நிறுவனங்கள், (எஸ்.எல்.டி) ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் புதிதாக நிறுவப்பட்ட தொழில்நுட்ப அமைச்சின் கீழ்  மாற்றப்பட்டுள்ளன.

மேலும், இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் என்பன தொழில்நுட்ப அமைச்சின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.

முன்னர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த காவல் துறையும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறையும் புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20