மீள் பரிசீலனையில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களின் விண்ணப்பங்கள் ; ஜனக பண்டார

Published By: Digital Desk 4

22 Nov, 2020 | 04:19 PM
image

(க.பிரசன்னா)

அரசாங்கத்தின் பட்டதாரி பயிலுனர் மற்றும் டிப்ளோமாதாரி பயிற்சி வேலைத்திட்டத்தின் நியமனத்தின்போது நிராகரிக்கப்பட்டு மீண்டும் மேன்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

New Cabinet: Janaka Bandara Tennakoon appointed Minister of Public  Administration, Provincial Councils & Local Government - Ceylon Today

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்துவம் கொண்டிருத்தல், தொழிலில் ஈடுபட்டிருத்தல், களனி பல்கலைக்கழக பட்டச் சான்றிதழ் பெற்றிருக்காமை முதலான காரணங்களால் நியமனம் வழங்குவது மறுக்கப்பட்ட பட்டதாரிகள் சமர்ப்பித்த மேன்முறையீட்டு விண்ணப்பங்களின் தகைமையை பரிசீலித்து அவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முறைப்பாடு செய்யப்பட்ட பின் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தொழில் வழங்குவது தொடர்பாக எதிர்காலத்தில் கொள்கை அளவிலான தீர்மானம் எடுக்கப்படுமெனவும் வேறுபாடுகள் பாராது நியமனங்கள் வழங்கப்படுவதுடன் 2019 ஆம் ஆண்டு நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

05.02.2020 திகதி 20/0312/201/008 அமைச்சரவை விஞ்ஞாபனத்துக்கு அமைவாக ஜனாதிபதியின் 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்துக்கு அமைய விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேன்முறையீடு செய்வதற்கு 15.09.2020 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேன்முறையீடு செய்யப்பட்டு இரண்டுமாத காலத்திலும் எவ்விதமான பதிலும் உரியவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பாக வேலையற்ற பட்டதாரிகளினால் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்த அதேவேளை ஜனாதிபதி அறிவித்த 50 ஆயிரம் பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 10,000 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04