நீர்ப்பாசன விடயங்களில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை

Published By: Raam

27 Jul, 2016 | 09:51 PM
image

(ரொபட் அன்டனி) 

நீரியல் மற்றும் நீர்ப்பாசன விடயங்களில் மாகாண சபைகளுக்கு எவ்விதமான அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனவே நீரியல் மற்றும் நீர்ப்பாசன பிரிவுகள் எப்போதும் மத்திய அரசாங்கத்திடமே காணப்படும் என்று அமைச்சரவை  பேச்சாளரும் அமைச்சருமான  ராஜித்த சேனராட்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலளார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அதாவது மொறகாகந்த திட்டத்திலிருந்து வடக்கு நீர் செல்லும் விடயம் தொடர்பான நிர்வாகம்  வடக்கு மாகாண சபைக்கு  வேண்டுமெனவும்  மகாவலி அதிகார சபை போன்ற நிறுவனங்கள் மாகாண சபையை மதிப்பதில்லை என்றும்   வடக்கு முதல்வர்  தெரிவித்துள்ளார்.  இது  தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று    ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார். 

இந்நிலையில்  அமைச்சர் மேலும் இங்கு குறிப்பிடுகையில்

 13 ஆவது திருத்தச் சட்டத்தில் நீர்ப்பாசன விடயம் தொடர்பில் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனவே நீரியல் மற்றும் நீர்ப்பாசன பிரிவுகள் எப்போதும் மத்திய அரசாங்கத்திடமே காணப்படும். 

நீரியல் மற்றும் நீர்ப்பாசன விடயங்களில் மாகாண சபைகளுக்கு எவ்விதமான அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என்பதனை புரிந்துகொள்ளவேண்டும். எனவே அதில் மாகாண சபைகள்  தலையிட முடியாது என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33