மட்டக்களப்பு, தேத்தாதீவு விபத்து : சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு!

21 Nov, 2020 | 08:45 PM
image

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தேத்தாதீவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியாசலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

தேத்தாதீவைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட தேத்தாதீவு கிராமத்தில் வெள்ளிக்கிழமை (20) காலை 6.30 மணியளவில் பிரதான வீதியை கடந்து  கடைக்குச் சென்று திரும்பிய  7 வயது சிறுமி மீது பொலனறுவைப் பகுதியிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக லெறி ஒன்று மோதியதில் குறித்த சிறுமி படுகாயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

சிறுமிக்கு மேலதிக சிகிச்சையை தொடர சிறுமிக்கு சி.ரி.ஸ்கேன்  எடுக்க வைத்தியர்கள் ஆலோசித்தப்போதும் சி.ரி.ஸ்கேன் எடுக்கும் கதிரியக்கவியலாளர்கள் கடந்த 2 அரை மாதங்களாக தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு கடமைக்குச் சமூகம் கொடுக்காமல் இருந்து வருகின்றாமையால் கால தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சி.ரி.ஸ்கேன் அறிக்கையைப் பார்வையிட்ட வைத்தியர்கள் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு சிறுமியின் உடல் நிலை இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியின் உடலைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எஸ்.ஜீவரெட்ணம் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி களுவாஞ்சிகுடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08