வவுனியாவில் சுகாதார நடைமுறைகளை மீறிய 20க்கு மேற்பட்டவர்களுக்கு சுய தனிமைப்படுத்தல்!

Published By: R. Kalaichelvan

21 Nov, 2020 | 03:59 PM
image

சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்ட 20 இற்கும் மேற்பட்டோர் வவுனியாவில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 இன் தாக்கம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் கொவிட் -19 தாக்கம் அற்ற வவுனியாவை கட்டியெழுப்புவோம் எனும் எண்ணக்கருவில் வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது வர்த்தக நிலையங்களில் முகக்கவசம் சீராக அணியாத பணியாளர்கள், வீதியில் முகக்கவசமின்றி பயணித்தவர்கள், தரமற்ற முகக்கவசங்களை அணிந்திருந்தவர்கள் என பலரை சுகாதார பரிசோதகர்கள் இணங்கண்டதுடன் அவர்களின் பெயர் விபரங்களை திரட்டியதுடன் குறித்த நபர்களை சுகாதார திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறு திகதியும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்ட திகதியில் சில நபர்கள் மாத்திரமே சுகாதார திணைக்களத்திற்கு வருகை தந்திருந்திருந்தனர். வருகை தந்தவர்களுடன் சுகாதார பிரிவினர் கொவிட் 19 தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கி கலந்துரையாடல் மேற்கொண்டதுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

சுகாதார நடைமுறைகளில் மீறி செயற்பட்டதுடன், சுகாதார பிரிவினரின் அழைப்பை மீறிய மிகுதி 20க்கும் மேற்பட்டவர்கள் இணங்காணப்பட்டு, அவர்களை சுகாதார பிரிவினர் அவர்களின் வீடுகளிலேயே ஒரு வாரம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

சுகாதார பிரிவினரின் இவ் அதிரடி நடவடிக்கையினால் வவுனியா மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவார்கள் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37