மக்களிடம் பணமில்லாத போது வரி சலுகைகளால் என்ன பயன் - ரணில் விக்கிரமசிங்க  

Published By: Digital Desk 3

20 Nov, 2020 | 01:26 PM
image

(எம்.மனோசித்ரா)

வரவு-செலவு திட்ட தரவுகள் பல தவறானவையாகும். போலி தரவுகளுடன் செயற்பட்டால் பணவீக்கமே ஏற்பட்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும். மக்களிடம் பணமில்லாத நிலையில் வரி சலுகைகள் வழங்கி என்ன பயன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

கொரோனாவை காரணம் காட்டி ஊடகங்களுக்கு பாராளுமன்ற கதவுகள் அடைக்கப்பட்டமை ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு சுபயோகமாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சி உறுப்பினர்கள் நேற்று சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

2021 ஆம் நிதி ஆண்டிற்காக ஆளும் கட்சி சமர்ப்பித்துள்ள வரவு-செலவு திட்ட தரவுகள்பல தவறானவையாகும். நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகம் மறை எண்ணில் இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்திருந்தது. ஆனால் வரவு செலவு திட்ட அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி நிலையில் உள்ளதாக தரவுகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு போலி தரவுகளுடன் செயற்பட்டால் பணவீக்கமே ஏற்படும்.

அதன் பின்னர் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும். வரி சலுகைகள் வழங்கினாலும் கொள்வனவு செய்ய மக்களிடம் பணம் இருக்க வேண்டும்.

மக்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் வகையில் ஆளும் கட்சியின் வரவு செலவு திட்டம் அமையவில்லை என்பது கவலைக்குறிய விடயமாகும்.  எனவே மக்களை தெளிவுப்படுத்த வேண்டும்.

குறைகளை ஆதாரத்துடன் ஒப்புவிக்க ஐக்கிய தேசிய கட்சி செயற்பட வேண்டும். இந்த விடயத்தில் பிரதி தலைவர் என்ற வகையில் ருவன் விஜேவர்தனவிற்கு பாரிய பொறுப்புள்ளது.

ஜனநாயகத்தின் முக்கிய தூணாக ஊடகம் உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் பாராளுமன்றமே ஊடகத்தை ஓரங்கட்டுவது என்பது ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு சுபயோகமாக அமையாது.

ஊடகங்கள் என்னை படுமோசமான முறையில்விமர்சித்தன. ஆனால் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் மும்முரமாக செயற்பட்டேன். கொரோனாவை காரணம் காட்டி ஊடகங்களுக்கு பாராளுமன்ற கதவுகள் அடைக்கப்பட்டமை தவறாகும். எதிர்க்கட்சி இதனை பேசுவதில்லை என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22