உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புள்ளி வழங்கும் முறை மாற்றம்

Published By: Vishnu

20 Nov, 2020 | 12:09 PM
image

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.சி உறுதிப்படுத்தியுள்ளது.

அனில் கும்ப்ளே தலைமையிலான கிரிக்கெட் கமிட்டியின் பரிந்துரைக்கு அமையவே இந்த திருத்தத்தை மேற்கொள்ள ஐ.சி.சி ஒப்புதலை அளித்துள்ளது.

இந்த வாரம் திங்களன்று தொடங்கிய ஐ.சி.சியின் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான கூட்டத்திலேயே இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு அணி பெற்ற புள்ளிகள் சதவீதத்துக்கு கணக்கிடப்படும் என்றும், அதற்கேற்ப புள்ளி முறைகள் திருத்தப்படும் என்றும் கடந்த வாரம் ESPNcricinfo செய்திச் ச‍ேவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், இந்தியா 360 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தது, அவுஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது.

புதிய முறையின் கீழ் இந்தியாவின் புள்ளிவிபர சதவீதம் 75 ஆகும். இந்தியா நான்கு தொடர்களில் விளையாடிய 480 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தற்சமயம் உள்ளது.

அதேநேரம் 82.2 சதவீத புள்ளிவிரபங்களை கொண்டுள்ள அவுஸ்திரேலியா மூன்று தொடர்களில் விளையாடிய 360 புள்ளிகள் என கணக்கிடப்பட்டுள்ளதுடன் முன்னிலையில் உள்ளது.

நிறைவடையாத போட்டிகள் சமனிலையில் முடிவடைந்ததாக கருதப்படம் என்று ஐ.சி.சி. விதிமுறைகள் கூறினாலும் கிரிக்கெட் குழு அடுத்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னர் முடிக்கப்படும் போட்டிகள் வரை டெஸ்ட் உலகக் கிண்ண நிலைகளை தீர்மானிக்க முடிவு செய்துள்ளது.

இந்த புதிய விதிமுறை குறித்து ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில், “

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது எனக் கருதப்படுகிறது. கொரோனா காரணமாக 85 சதவீத போட்டிகள் மட்டுமே நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. 

இதனால், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகளைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் எழுந்துவிடக் கூடாது என்பதற்காக புது விதிமுறையை வகுத்துள்ளோம்.

இந்த விதிமுறைப்படி, நடைபெறாத போட்டிகள் அனைத்தும் சமனிலையில் முடிந்ததாக கருதப்படும். எனினும் அடுத்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னர் முடிக்கப்படும் போட்டிகள் வரை டெஸ்ட் உலகக் கிண்ண நிலைகளை தீர்மானிக்க முடிவு செய்துள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மட்டுமே இறுதிப் போட்டிக்கான அணிகள் தேர்வு செய்யப்படும். இதனால் அதிக புள்ளிகள் பெற்ற அணிகளைவிட, அதிக சதவீதம் பெற்ற அணிகள் முன்னிலை வகிக்கும் என்று கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20