கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு கண்டி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் ஆகஸ்ட் 8 ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 18 ஆம் திகதிவரை மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனை கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் பொதரகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொங்கல்ல, கடுகஸ்தோட்டை, பேராதனிய, அலதெனிய, அம்பத்தன்ன, மடவலை, திகன மற்றும் தலத்துஓய அகிய பிரதேசங்களிலும் மதுபானசாலைகள் மூடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.