நினைவேந்தலுக்கு தடை - வவுனியா, மன்னார் நீதிமன்றங்கள் ஊடாக 22 பேருக்கு எதிராக தடை உத்தரவு

20 Nov, 2020 | 06:26 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அடுத்தவாரம் மன்னார், வவுனியா பகுதிகளில் இடம்பெறவுள்ள  நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து  இரு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

மன்னார் மற்றும் வவுனியா நீதிமன்றங்களே, பொலிஸார்  முன்வைத்த விடயங்களை ஆராய்ந்து நேற்று 22 பேருக்கு எதிராக இந்த தடை உத்தரவை பிறப்பித்தன.  

குற்றவியல் சட்டத்தின் 106 ( 1) ஆம் அத்தியாயத்துக்கு அமைய இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அருட் தந்தைமார், இதற்கு முன்னர் நினைவேந்தல் நிக்ழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களை பிரதிநிதித்துவம் செய்வோர் இந்த பட்டியலுக்குள் உள்ளடங்குகின்றனர்.

இது தொடர்பில் வீரகேசரியிடம் பேசிய பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்ததாவது,

' அடுத்தவாரம்  இடம்பெறவுள்ள புலிகளை நினைவு கூரும் நினைவேந்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக வவுனியா, மன்னார் நீதிமன்ரங்களை பொலிஸார் நாடி தடை உத்தர்வுகளை கோரினர். குற்றவியல் சட்டத்தின்  நியமங்களுக்கு அமைவாக இந்த கோரிக்கையை பொலிஸார் முன்வைத்தனர்.

 அதன்படி மன்னார்  நீதிமன்றம் ஊடாக 14 பேருக்கு எதிராகவும் வவுனியா நீதிமன்றம் ஊடாக 8 பேருக்கு எதிராகவும்  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த பகுதிகளில் எவரேனும் உயிரிழந்த புலிகள் இயக்க உறுப்பினர்களை நினைவு கூர்ந்தால், அவர்களுக்கு எதிராக நீதிமன்ற கட்டளையை மீறியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  அதற்காக வழக்குத் தொடர சந்தர்ப்பம் உள்ளது.

விஷேடமாக புலிகளின்  நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே  குரோதங்களை வளர்க்கும் நோக்கில் திட்டமிட்ட வகையில் இத்தகைய நினைவேந்தல்கள் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதனை அடிப்படையாக கொண்டே அந் நிகழ்வுகள் நீதிமன்றங்களின் கட்டளைகளைப் பெற்று தடை செய்யப்பட்டுள்ளன.' என தெரிவித்தார்.

மன்னார்  நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள்

பாராளுமன்ற உறுப்பினர் -இருதயநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன்

பாராளுமன்ற உறுப்பினர் - செல்வம் அடைக்கலநாதன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் - சிவாஜிலிங்கம்

பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை இமானுவேல் செபமாலை

மாவீரர் குடும்ப சங்கத் தலைவர் -வீரசியஸ்

2018 மாவீரர் தின ஏற்பாட்டாளர் ஜீவன் சந்திரகுமார்

2019 மாவீரர் தின ஏற்பாட்டாளர் ஜோசப் பேனார்ட் அன்டன் தாபறேரா

அன்டன் ரோஜன்

சுரேந்திர றேவல் அல்லது சுரேஷ்

வி.எஸ் . சிவகரன்

ஹெலன் ரொக்ஸ்

அருட்தந்தை (வெள்ளாங்குளம் )செபஸ்டியன் பிள்ளை டேனி கலிஸ்டர்  

அருட்தந்தை ( சிலாபத்துறை) ஸ்டீபன் ராஜ்

அருட்தந்தை( முருகண்டி தேவாலயம்) ஜெயசீலன்

வவுனியா  நீதிமன்றால்  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள்

செல்வநாயகம் அரவிந்தன்

காணாமால் ஆகப்பட்டோர் சங்கத்தின் தலைவர் -காசிப்பிள்ளை ஜெயவனிதா

காணாமால் ஆகப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் - கோபால் கிருஸ்ணராஜ் குமார்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் - செல்வராஜா கஜேந்திரன்

சிவபாத கஜேந்திரகுமாரன் அல்லது கஜன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன்

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51