19 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆரம்பமாகும் கல்வி நடடிக்கைகள்

Published By: Jayanthy

19 Nov, 2020 | 11:23 PM
image
  • பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானம்
  • இன்று 439 தொற்றாளர்கள்
  • கம்பஹாவில் மீண்டும் அதிக தொற்றாளர்கள்
  • சிறையிலிருந்து தப்பியோட முயன்ற இருவருக்கு கொரோனா!

(எம்.மனோசித்ரா)

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாட்டில் தினமும் அதிகரித்து வருகிறது. அதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை அண்மித்துள்ளது. எனினும் தற்போது நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதைப் போன்று அடுத்த வாரம் முதல் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாதுகாப்பான முறையில் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். 

அதன்படி மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளைத் தவிர நாட்டின் அனைத்து பாடசாலைகளும் தரம் 06 - 13 ஆம் வகுப்புளுக்காக மீண்டும் நவம்பர் 23 ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படும்.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இன்று வியாழக்கிழமை இரவு 10.30 மணி வரை 439 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 18,841 ஆக உயர்வடைந்துள்ளது. 

இனங்காணப்பட்ட மொத்த தொற்றார்களில் 5,869 பேர் சிகிச்சை பெற்று வருவதோடு , 12,903 பேர் குணமடைந்துள்ளனர். 580 பேர் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. 

நேற்று புதன்கிழமை இரவு 3 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமையவே நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று மரணங்கள் பதிவாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மரணங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதாவது,

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஆணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் தொற்றுடன் நீரிழிவு நோயும் காணப்பட்டமையாகும். 

கொழும்பு 12 ஐ சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவர் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் , நீரிழிவு என்பவற்றுடன் கொவிட் தொற்றுக்கும் உள்ளானமை மரணத்திற்கான காரணமாகும். 

கொழும்பு 13 ஐ சேர்ந்த 48 வயதுடைய ஆணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு நோய் மற்றும் கொவிட் தொற்றுக்குள்ளானதால் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

கம்பஹாவில் மீண்டும் அதிக தொற்றாளர்கள்

நேற்று முன்தினம் புதன்கிழமை நாடளாவிய ரீதியில் 327 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 157 பேர் கொழும்பிலும் , 111 பேர் கம்பஹாவிலும் ஏனையோர் களுத்துறை, இரத்தினபுரி, காலி, அநுராதபுரம், புத்தளம், குருணாகல், நுவரெலியா, மாத்தறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் இனங்காணப்பட்டனர். 

இவ்வாரம் கம்பஹா மாவட்டத்தில் குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணட்டனர். எனினும் புதன்கிழமை மீண்டும் 111 என அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

சிறையிலிருந்து தப்பியோட முயன்ற இருவருக்கு கொரோனா!

கண்டி - போகம்பறை பழைய சிறைச்சாலையில், நேற்று முன்தினம் தப்பியோட முயன்றபோது உயிரிழந்த கைதிக்கும் தப்பியோடிய கைதிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறைச்சாலையில், விளக்கமறியல் உத்தரவின் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் நேற்றுமுன்தினம் காலை கண்டி - போகம்பறை பழைய சிறைச்சாலையில் இருந்து தப்பியோட மேற்கொண்ட முயற்சியின் போது,  ஒரு கைதி உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்திருந்தார்.

இவ்வாறு உயிரிழந்த கைதிக்கும் தப்பியோடிய கைதிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44