கொரோனாவால் இறந்த இஸ்லாமியர்களை அவரவர் பிரதேசங்களில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன்

19 Nov, 2020 | 06:08 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தில் உயிரிழந்த இஸ்லாமியர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், ஆனால் அனைவரையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

இறந்தவர்களை அவரவர் பிரதேசங்களில் அடைக்கம் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்  நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோயில் உயிரிழந்த இஸ்லாமியர்களை அவர்களின் சடங்குகளுக்கு ஏற்ப அடக்கம் செய்ய பிரதமர் யோசனை ஒன்றை அமைச்சரவையில் முன்வைத்ததாக பத்திரிகைகளில் அறிந்துகொள்ள முடிந்தது. 

அதனை நாம் வரவேற்கிறோம். அவரவர் மத சடங்களுக்கு அமைய உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் அதுவும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய முன்னெடுக்க வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் வேறு தகவல்களும் வெளிவருகின்றன. இறந்தவர்களை அடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தை தெரிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த யோசனைகளை முன்வைத்ததாக அறிந்துகொள்ள முடிகின்றது. கடல் இருக்கின்ற காரணத்தினால் மன்னார் உகந்த பிரதேசம் என கூறியுள்ளதாக அறிய முடிகின்றது. இது உண்மையான காரணியாக இருந்தால் இலங்கையை சுற்றி கடல் தான் உள்ளது. 

ஆகவே அந்தந்த மாவட்டங்களில் ஒரு பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டுமே தவிர அனைவரையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்யக் கூடாது, அது மக்களிடையே தவறான சிந்தனையை உருவாக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46