வடக்கு, கிழக்கில் உழவர் சந்தையை உருவாக்க வேண்டும்: எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள்

Published By: J.G.Stephan

19 Nov, 2020 | 02:56 PM
image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உழவர் சந்தையை உருவாக்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கு விவசாயிகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்திற்கு பின்னர் எங்களுடைய மக்கள் பல்வேறு வகையிலும் கஷ்டப்பட்ட வண்ணம் இருக்கின்றார்கள். பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

 

அதைவிட இன்னுமொரு கேள்வியினையும் கேட்க விரும்புகின்றோம். அதாவது தம்புள்ளையில் இருந்து வரும் மரக்கறிகளுக்கு பத்து வீத கழிவு இல்லை. தம்புள்ளையில் இருந்து வந்தால் ஒரு நீதியும் எங்களுடைய விவசாயிகளுக்கு பத்து வீத கழிவு என்றால் இது மிகவும் கொடுமையான ஒரு நடைமுறை. இந்த நடவடிக்கையிலிருந்து விலக்களிப்பதற்கு ஏற்கனவே பல உள்ளூராட்சி மன்றங்களில் தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அது அமுல்ப்படுத்தப்படுவதில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே இந்த நடைமுறையை உடனடியாக அமுல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட  உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் நடவடிக்கையினை எடுக்கவேண்டும். அவ்வாறு எடுக்கவில்லை என்றால் மக்கள் மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான போராட்டங்களுக்கு எங்களை தலைமை தாங்கும் நிலைக்கு தள்ளாதீர்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04