இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில்அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 66 ஒட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளை இழந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வோர்க்கஸ் மாத்திரம் 47 ஒட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் ஏனைய வீரர்கள் சோபிக்காத நிலையில் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஹேரத் மற்றும் அறிமுக வீரராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் சந்தகன் ஆகியோர்  தலா 4 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி விக்கட்டிழப்பின்றி 6 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.