உலகிலேயே உயரமான கண்ணாடி லிப்ட் - அவதார் திரைப்படத்தை நினைவுபடுத்துகிறதாம் !

Published By: Digital Desk 3

19 Nov, 2020 | 02:27 PM
image

உலகிலேயே உயரமான வெளிப்புற லிப்ட் சீனாவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஷாங்ஜியாங்ஜி மாகாணத்தில் மலைப்பகுதியில் சுமார் 1000 அடி உயரத்திற்கு இந்த லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்றடுக்குகளுடன் முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள இந்த லிப்ட் கீழிருந்து மேலே செல்ல 88 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது.

இந்த லிப்டில் பயணம் செய்யும் போது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் மலைகள் அந்தரத்தில் தொங்குவது போல இருப்பதால், அவை அவதார் திரைப்படத்தை நினைவுபடுத்துவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் பயணிப்பதற்கு நாளொன்றுக்கு 8 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு முறை பயணிப்பதற்கு 129 யுவான் (இலங்கை ரூபாய் மதிப்பு 3600) அறவிடப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right