பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிடவும் - யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர்

Published By: Digital Desk 4

19 Nov, 2020 | 10:54 AM
image

யாழ். பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வெளிவாரிக் கற்கைகளுக்கான பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பணித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த வணிகமாணி (பழைய பாடத்திட்ட) பரீட்சை முடிவுகள் தாமதமாவது குறித்து பரீட்சார்த்திகளினால் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து பல்கலைக்கழக மூதவைக் கூட்டத்தில் துணைவேந்தர்  திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பினார். 

இது தொடர்பில் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் பற்றி பணிப்பாளர் மற்றும் கற்கை நெறி இணைப்பாளர் ஆகியோர் விளக்கமளித்தனர்.

உள்வாரியாக நடாத்தப்படும் பரீட்சைகளின் முடிவுகளை இரண்டு மாத காலத்தினுள் கையளிப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதே போலவே வெளிவாரிப் பரீட்சை முடிவுகளையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06