1000 ரூபா சம்பளத்தை வழங்கப்போவதில்லை - பெருந்தோட்டக் கம்பனிகள் அறிவிப்பு

19 Nov, 2020 | 10:32 AM
image

அடுத்த வருடத்தில் இருந்து தோட்டத்தொழிலாளர்களுக்கு தினம் 1000 ரூபா  சம்பளத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பட் ஜெட் முன்மொழிவு தொடர்பாக அரசாங்கம் தங்களை அணுகவில்லை என்று பெருந்தோட்டக் கம்பனிகள் கூறியிருக்கின்றன.

அரசாங்கத்தினால் மானியம் வழங்கப்படாத  பட்சதத்தில் 1000 ரூபா தினச் சம்பளத்தை வழங்குவதற்கு இணங்குவதை தாங்கள் தற்போது அடைகின்ற பாரியளவு நட்டங்கள் தடுக்கும் என்றும் கம்பனிகள் தெரிவித்திருக்கின்றன.

அதேவேளை, நேற்று முன்தினம் செவ்வாயன்று இணையவழி செய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட இலங்கை தோட்டத்துரைமார் சங்கம் தங்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் மாற்று சம்பளத் திட்டத்தை தோட்டத்தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியது.

தாங்கள் முன்வைத்திருக்கும் சம்பளத்திட்ட  யோசனை தோட்டத் தொழிலாளர்கள் தினமொன்றுக்கு 1000 ரூபாவையும் விட கூடுதலாக சம்பாதிப்பதை உறுதி செய்யும்.அது அவர்களின் தொழில் ஆற்றலில் தங்கியிருக்கிறது என்றும் துரைமார் சங்கம் கூறுகிறது.

அந்த யோசனை ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டதால்,  அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் திரும்வும்  ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்டபோது துரைமார் சங்க பேச்சாளரான கலாநிதி ரொஷான் இராஜதுரை ஏற்றுக்கெகாள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை என்று பதிலளித்தார்.

தங்களது மாற்று யோசனையை ஏற்றுக்கொள்ளத் தவறினால் பெருந்தோட்டத் தொழில்துறை மேலும் பாதிக்கப்படும் என்று எச்சரித்த இராஜதுரை, கடந்த 28 வருடங்களாக இலங்கையின் முழுத் தேயிலையிலும் சுமார் 30 சதவீதத்தை உற்பத்தி செய்யும் பிராந்திய தோட்டக் கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் தினச்சம்பளத்தை நிர்ணயிப்பதற்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் முட்டுக்கட்டை நிலையை அடைந்திருக்கின்றன என்று சொன்னார்.

ஆனால், புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் 2021 ஜனவரியில் நடைபெறவிருக்கும் நிலையில் வேறு நாடுகளில் வெற்றிகரமாக பிரயோகிக்கப்படுகின்ற விவசாய - வர்த்தக வகைமாதிரிகளின் வழியில் அர்த்தமுடையதும் முற்போக்கானதுமான சீர்திருத்தங்களை பெருந்தோட்டத்துறையில்  அறிமுகப்படுத்துவது அவசியமாகும் என்று துரைமார் சங்கத்தின் தலைவரான பாதியா புல்முல்ல வாதிடுகிறார்.

" இதுவே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே மார்க்கம்.தோட்டத்தொழிலாளர் குடும்பங்களின் எதிர்கால நலன்களில் அக்கறைகொண்ட சகல தரப்பினரும் 1000 ரூபாவுக்கும் கூடுதலான வேதனத்தை தொழிலாளர்கள் பெறுவதற்கு வழிவகுக்கக்கூடிய எமது மாற்று யோசனையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.எமது யோசனை உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் தோட்டத்தொழிலாளர்கள் மாதாந்தம் 55,000 ரூபா தொடக்கம்  70,000 ரூபாவரை சம்பாதிக்கமுடியும்" என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04